என் மலர்
மயிலாடுதுறை
- போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்கிடவேண்டும், மதுஅருந்திவிட்டோ, செல் போன் பேசிக்கொண்டோ, வாகனங்களை இயக்ககூடாது.அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் நகரில் ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். அப்போது போக்குவரத்து முதல்நிலை காவலர்கள் தேவேந்திரன், பூபாலன், அண்ணாமலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர். முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.
- நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை இயக்கி வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு சீர்காழி மின்வாரிய கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், தாமரை செல்வி திருமாறன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
- மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகரமன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில்,
ரமாமணி (அ.தி.மு.க): சீர்காழி எரிவாயு தகணமேடை முன்பு நிர்வகித்த வந்த பாபு என்பவருக்கு வழங்கிடவேண்டும்.
ஏ.பி.எஸ். பாஸ்கரன் (தி.மு.க): சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர்.
ராஜசேகரன் (தே.மு.தி.க): உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் தமிழக முதல்வரை அவமதிப்பு செய்யும் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சாமிநாதன் (தி.மு.க): எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க): சீர்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவதாஸ் (தி.மு.க): எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். கஸ்தூரிபாய் (தி.மு.க): எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
தலைவர் துர்கா ராஜசேகரன்: எரிவாயு தகணமேடை அறக்கட்டளை மூலம் நிர்வகித்திட அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிர்வகிக்கலாம். தனிநபர் மேற்கொள்ளமுடியாது. அயோத்திதாஸ் திட்டத்தின் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சீர்காழி நகர மன்ற கூட்ட அரங்கில் சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு நகர மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது. இந்தப் பணிகள் தரம் இல்லைஎனக்கூறியும், செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அ.தி.மு.க.வை சேர்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா? என விவாதித்தனர்.
- கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தொடக்கப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி கட்டடங்கள், சமையல் கூடம் கட்டடம் ஆகியவற்றினை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பருவமழை தொடங்க வுள்ளதால் கட்டடங்களில் உறுதித்தன்மை எவ்வாறு உள்ளது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்ய வேண்டுமா ? என்பது குறித்து விவாதித்தனர். தொடர்ந்து சீர்காழி பழையபேருந்து நிலையம் பகுதியில் ரூ.4 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், போக்குவரத்திற்கு ஏதுவாக பணிகளை தரமாக விரைந்து முடித்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
- இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும், கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.
- உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர் புரத்தில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர்..மேலும் இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும் , கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது .
ஒளிலாயத்தை நிர்மானித்த மறைந்த ராஜேந்திரா சுவாமிகளின் 6-வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் ஆகியவை நாளை ( ஞாயிற்றுக்கிழமை )காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இறையருள பெற சத்குரு ஒளிலாய பீடம் நாடி. செல்வமுத்துக்குமரன், நாடி .செந்தமிழ் செல்வன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
- பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
- பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஸ்ரீநிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளினார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி வேங்கடாஜலபதி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளது. புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீநிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளினார். பின்ன சுவாமி வீதியுலாவாக வருகை தந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் பல்லவராயன் பேட்டையில் உள்ள குளத்தில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து மூன்று முறை தெப்பம் வலம் வந்தன. பட்டர் சுவாமிகள் தீப ஆராதனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதில் விழா குழு வினர்கள் சந்தா னகிருஷ்ணன் , மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- பெரிய விபத்துக்களில் இருந்து மக்களை மீட்பது எப்படி?
- தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை மற்றும் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு முதலுதவி செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் இந்திரன், உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கத்தை பொது மக்களுக்கு செய்துகா ன்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரணம் தருவாயில் காப்பாற்றுவது, பெரிய விபத்துக்கள் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்தும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் டிரைவிங் சென்டர் கார்த்தி ஒருங்கிணைத்தார்.
- ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.
- 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளில் நூற்று க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு போதிய கட்டட வசதி இல்லாத நிலையில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ன் காணொளி காட்சி மூலமாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன்,திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் முருகன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்களுக்கு இனிப்பு கள் வழங்கினர்.
இதேபோல் செம்மங்குடி ஊராட்சியில் ரூ.27லட்சத்தி ல் புதிதாக 2வகுப்பறை களுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அவை தமிழகமுதல்வரால் காணொளிகாட்சி மூலம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன்,துணை தலைவர் ரமணிசந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.
கொள்ளிடம் அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 27 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகள் அடங்கிய இரண்டு வகுப்பறைகள்வுடனான புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை குத்துவி ளக்கேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் தியாகரா ஜன்,வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் ஞான புகழேந்தி , தலைமை ஆசிரியர் தங்கசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி, உமையாள்பதி, பழைய பாளையம், பண்ணங்குடி, பச்சபெருமா ள்நல்லூர், அரசூர், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் ரூ 2 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டிருந்த பள்ளி கட்டடங்கள் துவக்கி வைக்கப்பட்டன.
- சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.
- டி.டி.வி.தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி சுவாமி அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார்.
காசிக்கு இணை யாக அஷ்டபைரவர்கள் தனிசன்னதியில் அருள்பாலி க்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பிரம்மபுரீ ஸ்வரர்சுவாமி, சட்டை நாதர்சுவாமி, திரு ஞானசம்ப ந்தர்சந்நிதி, திருநிலை நாயகி அம்பாள், மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் பெயரில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.
தொடர்ந்து கோயில் பிரசாதங்கள், சுவாமி படங்கள் ஆகியவை டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டது.
அவருடன் துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடனிருந்தனர்.
- கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார்.
- அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமம், சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர்
கிருஷ்ணமூர்த்தி ( வயது 90), கொத்தனார்.
இவருடைய மனைவி மருதம்பாள் (வயது 85). இவர்களுக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.
அவர்கள் தனியே அருகே அருகே வசித்துவருகிறார்கள். கிருஷ்ணமூர்த்தி ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
மகன்கள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர்கள்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார். இந்த சம்பவத்தை அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுக்கு பெரும் சோகத்தையும் ஏற்படு த்தயுள்ளது.
- சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.
- பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, பழைய பேருந்து நிலையம், ஊழியக்காரன்தோப்பு, ஆர்.வி.எஸ்.நகர்,திருவள்ளுவர்நகர்,திட்டைசாலை, மாரிமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் நகர் பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.
கூட்டம்,கூட்டமாக சுற்றிவந்ததால் அப்பகுதியில் கொசுதொல்லையும்,சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டுவந்தது.
மேலும் விவசாய நிலங்களில் உட்புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி போலீஸார் பாதுகாப்புடன் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் திருமங்கலத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் அவரது ஊழியர்களால் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட பன்றிகள் வாகனங்களில் வலையுடன் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.
அப்போது சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரன், இளநிலை உதவியாளர் பாபு, அலெக்ஸ் ஆகியோர் உடன்இருந்தனர்.
சீர்காழி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பன்றிகளை அப்புறப்ப டுத்த உத்தரவிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி , சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, இதற்கு ஒத்துழைப்பு நல்கிய சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர், சீர்காழி வட்டாச்சியர், சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோருக்கு சீர்காழி நகர பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கழுமலையார் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கோவி.நடராஜன் தெரிவித்தார்.






