சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோவிலில் டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம்

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது.டி.டி.வி.தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
சட்டைநாதர்சுவாமி கோயிலில்  டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
சட்டைநாதர்சுவாமி கோயிலில் டி.டி.வி.தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
Published on

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி சுவாமி அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சி தருகிறார்.

காசிக்கு இணை யாக அஷ்டபைரவர்கள் தனிசன்னதியில் அருள்பாலி க்கின்றனர்.

பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பிரம்மபுரீ ஸ்வரர்சுவாமி, சட்டை நாதர்சுவாமி, திரு ஞானசம்ப ந்தர்சந்நிதி, திருநிலை நாயகி அம்பாள், மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் பெயரில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

தொடர்ந்து கோயில் பிரசாதங்கள், சுவாமி படங்கள் ஆகியவை டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டது.

அவருடன் துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com