search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transformers"

    • 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.
    • நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை இயக்கி வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு சீர்காழி மின்வாரிய கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், தாமரை செல்வி திருமாறன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி அம்பாள் நகர், பூரணம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
    • கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மின்மாற்றிகளை இயக்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி அம்பாள் நகர், பூரணம்மாள் காலனி, பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜூவ்நகர் 6ஆவது தெரு, முடுக்கு மீண்டான்பட்டி, கரடி குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சி.ஆர். காலனி, கயத்தாறு அண்ணா நகர் ஆகிய 6 இடங்களில் ரூ.29.17 லட்சம் மதிப்பில் 6 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை பொறியாளர் குப்புராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு மின்மாற்றிகளை இயக்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில், உதவி செயற்பொறியாளர்கள் குருசாமி (நகர்ப்புறம்), மிகாவேல் (ஊரகம்), முனியசாமி (கயத்தாறு), தங்கராஜ் (கட்டுமானம்), உதவி மின் பொறியாளர்கள் லட்சுமி பிரியா, மாரீஸ்வரன், கண்ணன், விஷ்ணுசங்கர் சுரேஷ், அருண்நேரு, மின்வாரிய பணியாளர்கள்,

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலர் விஜய பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, ஜெய லலிதா பேரவை வடக்கு மாவட்ட செயலர் செல்வ குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொறையாறு அருகே 2 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது
    • பொது மக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் முன்னிலை வகித்தார். பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன், வரவேறறார்.

    இதில் மயிலாடுதுறை ராமலிங்கம்,எம்.பி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

    விழாவில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர்களை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரத்தில் நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனிடம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோமநாதபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தெளிச்சத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேசுவரி சேதுபதி, செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் கமுதக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரையும் முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கமுதக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா மோகன் வரவேற்றார்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    தகல்நார்சம்பட்டி, மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, புத்தகரம் வெலகல்நத்தம், வேட்டப்பட்டு, சோமநாயக்கன்பட்டி, அக்ராகரம், திரியாலம் பொம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை தேவராஜ் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் அரசு மூலம் இலவசமாக மின்சாரம் பெற்றதற்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், உமா, கவிதா, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளம் போல் தேங்கிய தண்ணீரில் டிரான்ஸ்பார்மர்கள் மிதக்கிறது.
    • குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 95 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. வாடிப்பட்டி மயானம் முன்பு தாதம்பட்டிக்கு செல்லும் சாலையோரம் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.

    அந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு கீழ் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதன் எதிர்புறம் சாலையில் தண்ணீர் வடிந்து செல்ல தற்காலிகமாக வடிகால் அமைக்கப்பட்டது. அந்த வடிகால் சாலையின் மட்டத்திற்கு உள்ளது. அதனால் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வடிந்தபின் மீதமுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் 3 நாட்களாக தேங்கி உள்ளது. 

    • 3 புதிய மின்மாகந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியால் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.
    • சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தம்பட்டி, புத்திர கவுண்டபாளையம், ஆத்தூர் பகுதிகளுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியும், ஆத்தூர் துணை மின்நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின்மாற்றியும், புத்திர கவுண்டபாளையம் துணை மின் நிலையத்திற்கு மின் பகிர்மான திறன் 10 மெகா வாட்டில் இருந்து 16 மெகாவாட் ஆக அதிகரித்து மின்மாற்றிகள் நிறுவப்பட்டு உள்ளன.

    அவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மின்மாற்றிகளின் மூலம் அதிகமான பளுவை ஏற்றுக்கொண்டு மின் வினியோகம் செய்து வரும் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.

    மேலும் கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சர்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி, கணவாய்காடு, தும்பாதூளிப்பட்டி, பால் பண்ணை மற்றும் ஆத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியாபுரி, செல்லியம்பாளையம், அக்கி செட்டிபாளையம், கொத்தாம்பாடி மற்றும் புத்திரகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஆரியம்பாளையம். பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

    இந்த தகவலை சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    ×