ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றிகள்

தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றிகள் தொடங்கி வைத்த காட்சி.
ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றிகள் தொடங்கி வைத்த காட்சி.
Published on

திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதியதாக ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தகல்நார்சம்பட்டி, மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, புத்தகரம் வெலகல்நத்தம், வேட்டப்பட்டு, சோமநாயக்கன்பட்டி, அக்ராகரம், திரியாலம் பொம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகளை தேவராஜ் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மேலும் அரசு மூலம் இலவசமாக மின்சாரம் பெற்றதற்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், உமா, கவிதா, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com