search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 3 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன
    X

    சேலம் மாவட்டத்தில் 3 புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டுக்கு வந்தன

    • 3 புதிய மின்மாகந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியால் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.
    • சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கந்தம்பட்டி, புத்திர கவுண்டபாளையம், ஆத்தூர் பகுதிகளுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின் மாற்றியும், ஆத்தூர் துணை மின்நிலையத்திற்கு 3-வது கூடுதல் மின்மாற்றியும், புத்திர கவுண்டபாளையம் துணை மின் நிலையத்திற்கு மின் பகிர்மான திறன் 10 மெகா வாட்டில் இருந்து 16 மெகாவாட் ஆக அதிகரித்து மின்மாற்றிகள் நிறுவப்பட்டு உள்ளன.

    அவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மின்மாற்றிகளின் மூலம் அதிகமான பளுவை ஏற்றுக்கொண்டு மின் வினியோகம் செய்து வரும் மின் மாற்றிகளின் பளுவை குறைக்கவும், கோடைகாலத்தில் அதிகமான மின் பளுவை சமாளிக்கவும், சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யவும் முடியும்.

    மேலும் கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சர்கார் கொல்லப்பட்டி, பெருமாம்பட்டி, கணவாய்காடு, தும்பாதூளிப்பட்டி, பால் பண்ணை மற்றும் ஆத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பழனியாபுரி, செல்லியம்பாளையம், அக்கி செட்டிபாளையம், கொத்தாம்பாடி மற்றும் புத்திரகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், தளவாய்ப்பட்டி, ஆரியம்பாளையம். பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

    இந்த தகவலை சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பாலசுப்பரமணி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×