search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறள் பேரவை ஆண்டு விழா
    X

    விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    திருக்குறள் பேரவை ஆண்டு விழா

    • திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடந்தது.
    • சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    பேரவையின் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழா தொடக்கத்தில் துறை சந்தானலெட்சுமி தமிழ் தாய் வாழ்த்தும், வழக்கறிஞர் கிருட்டிணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    காரைக்கால் அரசு மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் வண்டார்குழலி தொடக்க உரையாற்றினார்.

    வஃக்பு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யும்மான அப்துல் ரகுமான் மகிழ்உரையும், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் நிறைவு பேருரையாற்றினார்.

    அப்போது திருக்குறளை படித்து அதன்படி நடந்து கொண்டால் உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    திருக்குறளின் பெருமைகளை புகழ்ந்து பேசினர்.

    பின்னர் உலக திருக்குறள் இயக்கம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ், பேரவை துணைத் தலைவர் செல்லத்துரை, தேசிய நல்லாசிரியர் மனோகரன், கொள்கை விளக்க செயலாளர்கள் குரளன்பன், ராமலிங்கம், உள்ளீட்ட ஏராளமான தமிழ் பற்றாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்துக்கன்னியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×