search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Disturbance"

    • சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.
    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, பழைய பேருந்து நிலையம், ஊழியக்காரன்தோப்பு, ஆர்.வி.எஸ்.நகர்,திருவள்ளுவர்நகர்,திட்டைசாலை, மாரிமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் நகர் பகுதிகளில் பன்றிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரிந்து வந்தது.

    கூட்டம்,கூட்டமாக சுற்றிவந்ததால் அப்பகுதியில் கொசுதொல்லையும்,சுகாதாரசீர்கேடும் ஏற்பட்டுவந்தது.

    மேலும் விவசாய நிலங்களில் உட்புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காரா ஜசேகரன் அறிவுறுத்த லின்படி, சீர்காழி போலீஸார் பாதுகாப்புடன் நகரில் பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்த சுமார் 65 பன்றிகள் திருமங்கலத்தை சேர்ந்த ராமசந்திரன் மற்றும் அவரது ஊழியர்களால் ஒரே நாளில் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட பன்றிகள் வாகனங்களில் வலையுடன் ஏற்றி சென்று அப்புறப்ப டுத்தப்பட்டது.

    அப்போது சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கரன், இளநிலை உதவியாளர் பாபு, அலெக்ஸ் ஆகியோர் உடன்இருந்தனர்.

    சீர்காழி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பன்றிகளை அப்புறப்ப டுத்த உத்தரவிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி , சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, இதற்கு ஒத்துழைப்பு நல்கிய சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர், சீர்காழி வட்டாச்சியர், சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோருக்கு சீர்காழி நகர பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கழுமலையார் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கோவி.நடராஜன் தெரிவித்தார்.

    ×