search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recycling"

    • மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை.
    • மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் தனியார் பாரா மெடிக்கல் பயிலும் மாணவியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    இதில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி முன்னிலையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சேதம் அடைந்த மின்னணு கழிவுகளான சுவிட்போர்டுகள், விளக்குகள் டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
    • பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர நடவடிக்கைகள் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்கும் கடைகளின் உரிமை–யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மின்னணு கழிவுகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 14 கோட்டங்களிலும் இந்த மின்னணு கழிவுகளான சேதம் அடைந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின்விசிறிகள், டியூப் லைட்கள், சுவிட்போர்டுகள், விளக்குகள், என டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.

    அவ்வாறு சேகரிக்கப்–பட்டுள்ள பொருட்கள் தஞ்சை திலகர் திடலில் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கூடை தயாரித்தல், பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    இவற்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் திலகர் திடல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதோடு, மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இன்னும் 3 நாட்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சேகரிப்பு பணியில் 15 வாகனங்கள், 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 டன் வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.

    இந்த கழிவுகள் அனைத்தும் மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது"என்றார்.

    • பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஊக்கத்தொகையை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

    இதை கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அரிச்சல்முனையில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டி னை தவிர்த்து கடல் உயிரினங்களை பாது காக்க கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம் கிராமத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை மூலம் கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தங்கச்சிமடம் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஒப்படைத்தற்காக தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் ரூ. 10 ஆயிரத்திற்க்கான காசோலை வனத்துறைக்கு வழங்கப்பட்டது. தூளாக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்ததற்காக ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலை தங்கச்சிமடம் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. மேலும் பாம்பன் ஊராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட இயற்கை கரிம உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

    இந்தநிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வன உயிரினகாப்பாளர் ஜக்தீஷ்பகான் சுதாகர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், ராமேசுவரம் வட்டாட்சியர்கள் மார்ட்டின், அப்துல்ஜபார், மாவட்டசுற்றுலாஅலுவலர் வெங்கடாச்சலம், ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×