என் மலர்
மயிலாடுதுறை
- மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூளையில் 13 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறினர்.
- பள்ளியில் 8-ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு புத்தகம்,சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றி யத்தில் வட்டார வளமை யத்தின் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் படைத்த மாணவர்களை கண்டறியும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின் படி நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூலையில் 13 வயதுடைய சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். காலை மாதானம் செங்கல் சூளைக்கு சென்ற பொழுது மாணவி சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது பெற்றோர்களிடம் விசாரி த்த பொழுது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் கல்பூண்டியில் 4 ஆம் வகுப்பு படித்தாகவும் தாரபுரம் கடலூர் கேரளா போன்ற இடங்களுக்கு. சென்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டதால் படிக்க வைக்க முடிய வில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.
பெற்றோர்களுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மாவட்டஉதவி. திட்ட அலுவலர் ஞானசே கரன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் திருசங்கு மற்றும் ஜெய்கிருஷ்ணன் ஆலோசனையின் படி மாணவி அருகில் உள்ள சிவானந்த உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு சேர்க்க ப்பட்டு புத்தகம்மற்றும் சிருடை மற்றும் விலையி ல்லா பொருட்கள வழங்க ப்பட்டது. அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரி யர்கள் மணிமாறன் மற்றும் சேகர் ஆகியோர் இருந்தனர்.
- வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.
சீர்காழி, ஜூன்.22-
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கிருந்து செம்பனா ர்கோயில் பகுதியில் உள்ள மேமாத்தூர் என்ற இடத்துக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மயிலாடு துறை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாய சங்கத் தலைவர் வில்வநாதன் கூறுகையில், வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இது விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குழாய் பதிப்பதற்காக திடீரென வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி தோட்டத்துக்குள் சில ஊழியர்கள் புகுந்து முந்திரி மரக் கிளைகளை வெட்டி அகற்றியுளளனர்.இது வன்மையாக கண்டி க்க த்தக்கது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்
எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அத்துமீறி இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
- பள்ளி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
- மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிசபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். பேராசிரியர் செல்லம்மாள், பேராசிரியர் முனியசெல்வி, உடற்க ல்வி இயக்குனர் முரளி தரன், பேராசிரியர்ஷன்மு கவடிவேல், துணை பேராசி ரியர் சுரேஷ்கோபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள், மனவளக்கலை மாணவர்கள் பங்கேற்ற யோகா விழிப்புணர்வு பேரணியை பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாணவர்கள்கையில் பதாகைகளை ஏந்தி, விழிப்பு ணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணியானது முக்கியவீ திகளின் வழியாக சென்று சீர்காழி பழையபேருந்துநிலையத்தை அடைந்தது. முன்னதாக பள்ளி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மாணவி.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், பராமரிக்கப்பட்டு வந்த லக்ஷ்மி என்ற 2 கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
இதனை சசிகலா இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி ஆகியோரிடம் உரையாடினார்.
லட்சுமியிடம் பேசிய அவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததோடு விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த வாழ்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக லட்சுமி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.
- அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த குன்னம் மற்றும் பாலுரான் படுகையில் அரசு மணல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவு செய்த லாரிகளுக்கு சீர்காழி புறவழிச்சாலை துறையூர் செல்லும் பகுதியில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஆன்லைன் பதிவு மூலம் குறைந்த லாரிகளுக்கு மணல் அல்ல டோக்கன் வழங்கப்படுவதாகவும் மீதமுள்ள லாரிகளுக்கு ஆப்லைன் முறையில் மணல் அள்ள அனுமதிக்க படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில் ஆப் லைன் முறையில் மணல் அள்ள வெளி மாவட்ட லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்தனர்.
இதனால் சீர்காழி, மயிலாடுதுறை, வல்லம்ப–டுகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கு அதிகாரி–களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது வெளி மாவட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் லாரி ஓட்டுனர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன் பிறகு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசு அறிவித்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும் என சுமார் 50 -க்கும் மேற்பட்ட லாரிகளை டோக்கன் வழங்கும் இடத்திற்கு முன்பாக குறுக்கே நிறுத்தி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் உள்ளே டோக்கன் பெற்ற 70-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட லாரிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன. இதனால் ஆத்திரமடைந்து கிராம மக்களும் அப்பகுதியில் லாரி ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இந்த இரு தரப்பு திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனை அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீர்காழி வருவாய்த் துறையினரும் உரிமையாளர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
- சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
- மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.
சீர்காழி:
சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணா தலைமையில் யோகா மாஸ்டர் நிமல் முன்னிலையில் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். முதலில் மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் பயிற்றுவிக்கப்பட்டது.
- சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் அமைக்கவேண்டும்.
- தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40 அடி அகலம் கொண்ட சாலை அமைத்து தரவேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு,
ராஜசேகரன் (தே.மு.தி.க) சீர்காழி நகரில் சாலையோரம் உள்ள பல உணவகங்கள் கழிவுநீர் பாதையின் மேல் வைத்து கடை நடத்தப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவின் சுகாதாரத்தினை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்திடவேண்டும்.
காந்திமதி (தி.மு.க) எனது பகுதியில் உள்ள குளத்தினை தூர்வாரவேண்டும். 2-வது, 4-வது குறுக்கு தெருவில் மின்கம்பங்கள் அமைக்கவேண்டும். பொதுகழிப்பிடம் அமைக்கவேண்டும்.
சூரியபிரபா (பா.ம.க): கழிப்பிட கட்டிடம் கட்டும் பணியை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும். வாய்க்கால் தூர்வார வேண்டும்.
ரம்யாதனராஜ் (தி.மு.க) சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் கல் அமைக்கவேண்டும்.
ஜெயந்திபாபு, பிடாரி வடக்குவீதியில் வாணி விலாஸ் பள்ளியிலிருந்து கழுமலையம்மன் கோயில் வரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் திறந்து கிடப்பதால் அதற்கு சிமென்ட் சிலாப் அமைத்து மூடவேண்டும். பாலமுருகன், ஈசானியதெருவில் கொசுதொல்லை அதிகமாக இருப்பதால் கொசுமருந்து அடிக்கவேண்டும்.கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, தனது வார்டில் சாலைகளை சீரமை க்கவேண்டும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தவேண்டும்.
வேல்முருகன், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40அடி அகலம் கொண்ட சாலை அமைத்துதரவேண்டும். முழுமதிஇயமவரம்பன், பனமங்கலத்தல் உள்ள குளத்தை தூர்வார வேண்டும்.
முபாரக், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே பாரத வங்கி அமைந்துள்ள தேர்வடக்குவீதி சாலையில் மழைகாலத்தில் குளம்போல் சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதாரசீர்கேடு ஏற்படுவதை தடுக்க சீரமைப்பு பணிகளை தொடங்கவேண்டும். நித்தியாதேவி, எனது வார்டில் சாலையில் மழைநீர் தேங்காதவாறு சாலை அமைத்துதரவேண்டும் என்றார்.
- நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
- மேலும் குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த மன்னங்கோயில் நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பூஜை செய்து வந்தவர் சூரியமூர்த்தி குருக்கள். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளதோடு கோவில் உபயதாரர்களால் அளிக்கப்பட்ட குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். மேற்படி கோயிலை பூட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சாவியையும் ஒப்படைத்தார்.
- காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது.
- புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் விழுப்புரம் மாவட்டம் மத்திய புலனாய்வு பிரிவு மது விலக்கு இன்ஸ்பெக்டர் (பொ.திருச்சி மண்டலம்) புயல்.பாலச்சந்திரன் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் இணையத் பாட்ஷா, புலனாய்வு அமலாக்கப் பிரிவு போலீசார் சார்லஸ், திவாகர், இளந்திரையன், மகாமார்க்ஸ் ஆகியோர் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது. சுதாரித்த போலீசார் தடுப்பு அமைத்து கார்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தன.
மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.15 லட்சம் மதிப்பு கொண்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த ரகு, கவுதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார். சோமுராஜ், சண்முகம் ஆகிய 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு மதுபானம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
- கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
- தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
சீர்காழி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப்பாலை -மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி பகுதியில் நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் பார்வையிட்டார்.
அப்போது பொதுப்பணித் துறை அதிகாரியிடம் திட்ட வரைப்படத்தினை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வழியாக கடல் நீர் 22 கி.மீ உட்புகுந்துள்ளது. கோடை காலத்தில் நீர் நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நீண்ட நாளாக வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். 200 கிராமங்கள் பயன் அடையலாம். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும்.காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளும் வகையில் அரசு திட்டங்கள் தயார் செய்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்
.டெல்லி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக திட்ட அறிக்கையைவிவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த கூட்டம் வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.2017ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.430 கோடி அப்போதைய அ.தி.மு.க அரசால் ஒதுக்கப்ப–ட்டது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தனது தொகுதிக்கு திட்டத்தை மாற்றி எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் உடனடியாக தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். தடுப்பணை கட்ட தாமதித்தால் எனது தலை–மையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போது பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி.ஆ.பழனிசாமி, மாவட்ட தலைவர் ரெ.அன்ப–ழகன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.வி.முருகவேல், ஒன்றிய கவுன்சிலர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் பாலதண்டாயுதம், தியாகராஜன், குமார், நகர செயலாளர் சின்ணையன், செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சின்னையன், நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கே.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
- 15 வயது முதல் 35 வயது வரை முழுமையாக எழுத,படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி 15 வயது முதல் 35 வயது வரை முழுமை யாக எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. திருமுல்லைவாசல் கடைத்தெரு மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் இதை சார்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அருட்செல்வி ஆகியோர் ஈடுபட்டனர்.
- உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
- மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி படைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சேர்ந்த ங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை எனப்படும் குதிரைக்கு பூஜை, ஒட்டக பூஜை, கன்னிப்பெண்களுக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி ஸ்ரீ படைவெட்டி மாரியம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன வள்ளலார் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.






