என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாட முடிவு.
    • திய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென்பாதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கச்சேரி ரோடு, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 25 ஆண்டுகள் வர்த்தக சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் இக்கூட்டத்தில் விரைவில் சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடப்படுவது, அப்போது மாநில தலைவரை அழைத்து மாநில வர்த்தக சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருவதற்கு நிதி திரட்டித் தருவது, 25 ஆண்டு நிறைவு விழாவில் வர்த்தக சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா நடத்துவது, புதிய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்கிட துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டது.
    • அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் பல ஆண்டுகளாக பொதுஇடத்தில் குப்பை கொட்டுப்பட்டு வரும் பகுதியில் குப்பைகளை அகற்றி சுத்தம்செய்து தண்ணீர்தெளித்து, கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சீர்காழி நகராட்சி மற்றும் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சிறப்பு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமே ஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

    ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் சாமிநாதன், சுகாதார அலுவலர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்கள், தூய்மைபணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திடக்கழிவுகளை தனியாக பிரித்து பொதுமக்களிடமிருந்து வீடு, வீடாக தூய்மைபணியாளர்கள் வாங்கிட மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்கிட துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டது. அப்போது பிடாரி வடக்குவீத, தேர் கீழவீதி இணையும் பகுதியில் பலஆண்டுகளாக குப்பைக்கொட்டும்

    பகுதியாக இருப்பதால் அதனை தூய்மைபடுத்திட நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி களபணியாளர்களுடன் தானும் இணைந்து குப்பைகள் அகற்றப்பட்டவுடன் அவ்விடத்தை கூட்டி, தண்ணீர் தெளித்து தானே கோலம் வரைந்து என் குப்பை, என் பொறுப்பு என விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

    அப்போது துப்புறவு பணி மேற்பார்வையாளர்கள் வீரப்பன், அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும். அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி மணிகூண்டு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன்வசந்த்ஜாபேஸ், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், கல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிஷை, நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருளிருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள், கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.

    • மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
    • கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு, பேரிடர் நிதி முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை. அப்படிபட்ட சூழலிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மாநில அரசு உரிமைகளை பறிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். மேகதாது அணைகட்டுவோம் என்று கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்த்து அறிக்கை விடுவதோடு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி அதிகரித்திருக்கிறது. அதற்கான இடுபொருட்கள் வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடுஇன்றி உரம் வழங்க வேண்டும். நெல்லுக்கான ஊக்கத்தொ கையை காலத்தில் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராசு, மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.
    • வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களு க்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் அலுவலக உதவியாளர் பரத்குமார் தலைமை வகித்தார்.

    சீர்காழி குடிமை ப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் இந்துமதி, சாந்தி, வட்ட வழங்கல் தனி தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வரவேற்று பேசினார். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி தையல் எந்திரம், ஊன்றுகோல் ஆகியவற்றை வழங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டார். இதில் டாக்டர் அருண்ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மேலாளர்கள் சங்கர், சுமதி கலந்து கொண்டனர்.

    • 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
    • யாகசாலையை தொடர்ந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடந்த 19-ம்தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. காமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 குண்டங்களும்பரிவார தெய்வங்களுக்கு 10 குண்ட ங்கள் என 43 குண்டங்களில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வேத ஆகமம் திருமுறைகள், இசை பாராயணம் செய்யப்பட்டு தினம்தோறும் 96 வகையான ஹோமப் பொருட்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நிறைவாக 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சிவஸ்ரீ சுவாமிநாதன் சிவாச்சா ரியார் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி, துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்து கொன்டனர்.

    • இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ரோடு அருகில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துவாழ்த்து க்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர்செல்வராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தின் செயலர்கள் கலாவதி, ஞானசம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கிருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

    சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதே போல் சீர்காழி போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் காவலர் செயலி குறித்து விளக்கமளித்து காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சீர்காழி அருகே உள்ள கொண்டல், தேனூர், ஆதமங்கலம், ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளி குழந்தைகளுக்கு முறையான கை கழுவும் முறை, வெந்நீர் அருந்துவதால் தடுக்கப்படும் நோய்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளர்ப்பதன் அவசியம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட தன் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    • வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
    • அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவானது நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீ ர்செல்வம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசும்போது, இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக த்தில் தான் நடை முறை ப்படுத்தபட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 21 கல்லூரிகளை தொடக்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சேரும் என்றார்.இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலா ளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஊராட்சி தலைவர் புஷ்ப வல்லி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்தன 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
    • பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளான ஈசானியத் தெரு, நங்கநலத் தெரு, கீழ தென்பாதி ஊழியக்காரன் தோப்பு, பனங்காட்டு தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றி திரிந்தன.

    இதனை பிடித்து அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உத்தரவின்படி பன்றிகள் பிடிக்க ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீர்காழி போலீசார் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்புடன் எம்.எஸ்.கே. நகர், இரணியன் நகர், ஊழியக்காரன் தோப்பு, கிருஷ்ணமூர்த்தி நகர், கற்பக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர். அப்போது நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகராட்சி மேலாளர் காதர்தான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×