என் மலர்

  நீங்கள் தேடியது "Processor"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சீர்காழியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • இதில் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கிருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

  சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதே போல் சீர்காழி போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் காவலர் செயலி குறித்து விளக்கமளித்து காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. #Apple  ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் தீவிரமாக பொறியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்கால ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறையலாம்.

  சான் டெய்கோவில் பணியாற்ற இந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் பத்து வேலைவாய்ப்பு தகவல்களை பதிவிட்டுள்ளது. அதன்படி பிராசஸர் வடிவமைப்பிற்கென தெற்கு கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

  ஆப்பிள் விளம்பரங்களின் படி பொறியாளர்கள் அந்நிறுவனத்தின் சிப் உபகரணங்கள், ஆப்பிள் நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு பிராசஸர் மற்றும் வயர்லெஸ் சிப்செட்களில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  வயர்லெஸ் உபகரணங்களில் உருவாக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஆப்பிள் சிப் வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐபோன்களில் வழங்க வெவ்வேறு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய இருக்கிறது. 

  இதன் மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக்ஷிப் சாதனங்களை வித்தியாசப்படுத்த முடியும் என்பதோடு ஆப்பிள் செலவினங்களை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வயர்லெஸ் சிப்களை வழங்கி இருக்கிறது. எனினும் ஐபோன்களில் சொந்தமாக வயர்லெஸ் சிஸ்டம்களை உற்பத்தி செய்ததில்லை.

  ஆப்பிள் பணியமர்த்த இருக்கும் பொறியாளர்கள் எல்.டி.இ. மற்றும் ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் வயர்லெஸ் உபகரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் ஆப்பிள் வயர்லெஸ் உபகரணங்களுக்காக குவால்காம் நிறுவனத்தை அதிகம் நம்பியிருந்தது, பின் இன்டெல் நிறுவனத்தை நாடி இருக்கிறது.
  ×