search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் கண்காட்சியில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    வேளாண் கண்காட்சியில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்

    • வேளாண் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
    • நவீன தொழில் நுட்பங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் சங்கமம் - 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் விழா திருச்சி மாநகரில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 29-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு அரங்குகள், கலைநிகழ்ச்சிகள், செயல்விளக்கங்கள், கருத்தரங்குகள் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தங்களுக்கு தேவையான திட்டங்களின் மானியம் பெற உழவன் செயலி பதிவுகள் ஆகியவை விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் வேளாண்மை த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, விதை மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்தறை, தமிழ்நாடு வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளான் கருவி விற்பனை நிறுவனங்கள், நுண்னி பாசன நிறுவனங்கள் சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நவீன தொழில் நுட்பங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    எனவே விவசாயிகள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த புதிய இரகங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் பெற்று, பயன்பெற வேண்டும்.

    இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இலவச அனுமதியில் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பாக தங்களது வட்டார வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பெறியியல் மற்றும் வேளாண் வணிக அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருச்சியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×