என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரன்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரி புத்தூர் நோக்கி தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வரும் வழியில் பூங்குடி கிராமத்தில் சாலையோரம் உள்ள காளியம்மன் கோயில் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து கீழே சாய்ந்தது.

    அப்போது காளியம்மன் கோயில் முன்புறம் போடப்ப ட்டிருந்த கொட்டகை மீதும் லாரி மோதியதில் கொட்டகை கீழே விழுந்தது. இதில் கொட்டகை ஓரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (25) என்பவர் மீதும் கீற்று கொட்டகை விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ராஜேஷை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உரிய நேரத்தில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனையிட்டதில் 25 அடமான பத்திரங்கள், 8 உத்திரவாத பத்திரங்கள், தகவல் எதுவும் நிரப்பப்படாத 11 பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே எடமணல் ஆமப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (35). இவர் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷாவிடம், கந்துவட்டிக்கு பணம் பெற்று மனவேதனை அடைந்து வருவதாக புகார் அளித்திருந்தார். அதனையடுத்து எஸ்.பி.நிஷா உத்தரவின்படி சீர்காழி போலீசில் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மேலும் கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனை இட சீர்காழி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.அனுமதி உத்தரவின்படி சீர்காழி டி.எஸ்.பி. லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ. சீனிவாசன், எஸ்.எஸ்.ஐக்கள் செல்வராஜ், செந்தில் ஆகியோர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சீர்காழி அடுத்த வழுதலைக்குடி அக்ரஹார மேட்டுதெருவை சேர்ந்த சோலையம்மாள் (65) என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    சோதனையில் வீட்டில் 25 அடமான பத்திரங்கள், 8 உத்திரவாத பத்திரங்கள், தகவல் எதுவும் நிரப்பப்படாத 11 பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் எத்தனை பேருக்கு இதுபோன்று கந்துவட்டிக்கு பணம் கொடுத்து எழுதி வாங்கியுள்ளனர் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டிக்கு பணம் கொடுத்த தாய், மகன் கைதான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற சுமார் 13 ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளாக நின்று செல்வதில்லை.
    • பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தனித்தனியாக ரெயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிபேச்சுவா ர்த்தையில் உறுதியளிக்க ப்பட்டதால் தற்காலிகமா நிறுத்திவை க்கப்பட்டுள்ளது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற விரைவு ரெயில்கள் உள்ளிட்ட சுமார் 13 ரயில்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்று செல்வதில்லை. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ}மாணவிகள் என அனைத்துதரப்பினரும் அவதியடைந்து வருகி ன்றனர்.

    இதனிடையே சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி ரெயில் பயணிகள் நல சங்கம் ஆகியன சார்பில் 29ம் தேதி சீர்காழி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜூலை 9-ம் தேதி சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனிடையே சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், ரெயி ல்வேதுறை அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனி யாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் பாபு.கே.விஜயன் மற்றும் சங்க நிர்வாகிகள், ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.

    அதில் தற்போது பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திடவும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு கொண்டு தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் நகர வர்த்தக சங்கம், வர்த்தக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் செந்தில்குமார், ரயில்வே துறையை சேர்ந்த சங்கர்குரு ஆகியோர் பங்கேற்று ஜூலை 7ம் தேதிக்குள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின்பேரில் ஜூலை9ம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.

    • ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கண்களில் மண் துகள்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் பாலூரான்படுகை, குன்னம் ஆகிய 2 இடங்களில் யார்டு அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

    இவ்வாறு சீர்காழி மற்றும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லும்போது மேல்பகுதியை தார்பாய் கொண்டு மூடாமல் எடுத்து செல்லப்படுவதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களில் மணல் துகள்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள்விழும்போது தடுமாறி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    அதேபோல் நகர் பகுதிகளில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகள், கனரக லாரிகள், டிராக்டர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆகையால் மணல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து மணல் ஏற்றிவரும் லாரிகள் தார்போய் கொண்டு மூடப்பட்டு கொண்டு செல்வதை உறுதி செய்வதோடு உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி மணல் லாரிகள் இயக்கப்படுகிறதா என்பதையும் சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 7-ம் நூற்றாண்டில் இக்கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய தலம்.
    • கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது.இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்ம புரீஸ்வர ரர்சு வாமி அருள்பாலிக்கிறார். இங்கு மலைகோயிலில் தோணியப்பர்-உமாமகே ஸ்வரிஅம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். 7-ம் நூற்றா ண்டில் இக்கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் திருஞானசம்பந்த பெருமா னுக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய ஸ்தலம்.

    ஆதலால் தனி கோயிலில் திருஞானசம்பந்தர் மற்றும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்டபைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தரு ளியுள்ளனர். சட்டைநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில்30ஆண்டுக ளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் 27ஆவதுகுருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்பேரில் கும்பாபிஷேகம் விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தருமபுரம் ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் 293ஆவது மடாதிபதி திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதுமுதல் கோயில் 4 கோபுரங்கள், சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், மலைகோயில் உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இதோடு தொட ங்கிய கட்டளை மடம் கிரகபிரவேஷம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில் தற்போது திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோயில் பிரகாரங்கள் மற்றும் மேல் தளங்களில் சிதிலமடைந்த கருங்க ற்கள் பெயர்த்து அப்புற ப்படுத்தப்பட்டு புதிய கருங்கற்கள் பதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    பல டன் எடைக்கொண்ட கருங்கற்கள் வரவழைக்க ப்பட்டு கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பணி ஊழியர்கள் கருங்கற்கள் பிரகாரங்களில் பதித்து வருகின்றனர். பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையூறு இல்லாமல் திருப்பணிகள் ஒரு புறம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பணிகளை அவ்வபோது தருமபுரம் ஆதீனம் 27வதுகுருமகா சந்நிதானம் நேரில் பார்வை யிட்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.விரை வில் திருப்பணிகள் நிறைவு ப்பெற்று அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
    • புங்கனூர் ஊராட்சியில் உள்ள நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் உள்ள சாலைகள்குண்டும், குழியுமாக சேதமடைந்தி ருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இதனை யடுத்து சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    இதனையடுத்துசீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புங்கனூர் ஊராட்சிக்கு சாலை அமைத்திட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ஊராட்சி நிதி ரூ.4.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைக்கொண்டு புங்கனூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசல்தெரு, நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு, ரஹ்மான்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

    இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம்கமாலூதீன் பார்வையிட்டார். சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    • சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கேபிஎஸ்எம்.கணிவண்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், வட்டாரத் தலைவர் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் சரவணன்,முன்னாள் மாநில இளைஞரணி காங்கிரஸ் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட பொருளாளர் சிவராமன், மாவட்ட பொது செயலாளர் தியாக கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கட்டிடங்கள், வீடு உள்ளிட்டவைகள் கையகப்படுத்தியதற்குரிய இழப்பீட்டுத் தொகை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை.
    • இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர்பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பின ர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    அதன் விவரம் வருமாறு:-

    தேவிகா: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளதால் கழிவறையை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும் அப்பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரவேண்டும்.

    சாந்தி: ஆக்கூர் முக்கூட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து அன்னப்பன்பேட்டை வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்குரிய நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. அடிமனை தருமபுர ஆதீனம் திருக்கடையூர் கோயிலுக்கு சொந்தமானதாகும். அதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டிடங்கள், வீடு உள்ளிட்டவைகள் கையகப்படுத்தியதற்குரிய இழப்பீட்டுத் தொகை கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை. எனவே இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    ஜெயந்தி: தில்லையா டியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். ரஜினி: செம்பனார்கோயில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மோகன்தாஸ்: நாச்சிக்க ட்டளை- காந்திநகர் இடையே ராஜேந்திரன் வாய்க்காலில் பாலம் அமைக்க வேண்டும்.

    ஒன்றியக் குழு தலைவர்: சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பது மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் குறைபாடுகளை கண்டறிந்து உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

    • அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் மந்திரமா-தந்திரமா போன்ற அறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர்.
    • விழாவின் நிறைவில் மருத்துவர் பூபேஷ்தர்மேந்திரா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    அறிவியல்பரிசோதனைகள், காகிதக்கலை (ஒரிகாமி), அறிவியல்வி ளையா ட்டுக்கள், பாடல்கள் மற்றும் மந்திரமா?தந்திரமா? போன்றஅறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர். பேராசிரியர் சு.விழிநாதன் தலைமை வகித்தார்.

    சுபம் வித்யாமந்திர்பள்ளி தாளாளர் சுதீஷ்ஜெயின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நந்த.ராஜேந்திரன், மாநிலசெ யலாளர் ஸ்டீபன்நாதன், முன்னாள்மாநில செயலா ளர் ப.ராயர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு செயல்முறை விளக்கத்துடன் மாண வர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் பெற்றோர்களும், பள்ளிஆசிரியர்களும் கலந்து க்கொண்டனர். விழாவின் நிறைவில் மருத்துவர்தர்ம. பூபேஷ்தர்மேந்திரா மாணவர்க ளுக்கு சான்றிதழ்களை வழங்கி னார். சீர்காழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

    • உலக யோகா தின விழா கொண்டாட்டம் மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது.
    • மாணவர்கள் விருச்ச விருச்சாசாசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை யோகா பயிற்சி நிலையம் சார்பில் உலக யோகா தினவிழா மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரயில்வேதுறை ராமமூர்த்தி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறையை சேர்ந்த மகாமணி வரவேற்றார்.

    இதில் மாணவ மாணவிகள் விருச்ச விருச்சா ஆசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.கின்னஸ் சாதனை, உலக சாதனை படைத்தவர்களை லயன்ஸ் மோகன்ராஜ், நகராட்சி கடை நலச் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ், ஜெயின் யுவா சங்க தலைவர் மஹாவீர் சந்த் ஜெயின், முத்துக்குமார், ஜெயந்தி கனேசன் வாழ்துரையும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துக் கொன்டு யோகா மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் சுலோச்சனா நன்றி கூறினர்.

    • கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறார்.
    • இதில் 4 மாணவிகள் 5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களை கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் ஆசான் சுப்பிரமணியன் பல்வேறு பள்ளி மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழர் தற்காப்பு கலையான சிலம்பம் வாள்வீச்சு, கல்லெறிதல், மான் கொம்பு, பழகல்லெறிதல், முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கலை சங்கமம் 2022 விழா தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். காளிசரண், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளு க்கு கேடயங்கள்பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலம்பாட்டமாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

    வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.4 மாணவிகள் 5 மணிநேரம் 5வகை ஆயுதங்களைக் கொண்டு தொடர் தற்காப்புக்கலை செய்தனர்.மணிகண்டன் என்கிற மாணவர் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதம் தொடர்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தார்.பிரவீன் என்ற மாணவர் கற்கால போர்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணிநேரம் தொடர் சாதனை செய்தார்

    அதேபோல் ராஜே ஷ்குமார் என்ற மாணவர் 5 கிலோ கரலாக்கட்டை 3565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டார்.உலக சாதனை செய்த மாணவ மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.அக்கழகத்தின் நிறுவனர் ஆசான் டாக்டர் பி சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

    • தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
    • தி.மு.க அரசின் சாதனைகளையும், கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர செயலாளர் சுப்ராயன் மற்றும் சீர்காழி, கொள்ளிடங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், செல்.சேது ரவிக் குமார், மலர் விழி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களிடையே தி.மு.க அரசின் சாதனைகளையும், திமுக கட்சி வளர்ந்து வந்த விதத்தையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெ.கே. செந்தில் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக் கூறினார்.

    ×