search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sand trucks"

    • ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கண்களில் மண் துகள்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் பாலூரான்படுகை, குன்னம் ஆகிய 2 இடங்களில் யார்டு அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

    இவ்வாறு சீர்காழி மற்றும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லும்போது மேல்பகுதியை தார்பாய் கொண்டு மூடாமல் எடுத்து செல்லப்படுவதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களில் மணல் துகள்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள்விழும்போது தடுமாறி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    அதேபோல் நகர் பகுதிகளில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகள், கனரக லாரிகள், டிராக்டர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆகையால் மணல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து மணல் ஏற்றிவரும் லாரிகள் தார்போய் கொண்டு மூடப்பட்டு கொண்டு செல்வதை உறுதி செய்வதோடு உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி மணல் லாரிகள் இயக்கப்படுகிறதா என்பதையும் சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணல் ஏற்றி வரும் லாரிகள் தார்பாய் கொண்டு மணலை மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருந்த போதும், அதனை கடைபிடிக்காமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
    • மருவூர் மணல் குவாரி இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. அப்படி இருந்தும் கூட மணல் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகில் கொள்ளிடம் ஆற்றில் மருவூர் மற்றும் கோவிலடியில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் மணல் ஏற்றிய லாரிகள் திருக்காட்டுப்பள்ளி நகரின் வழியாக வெளியூர்களுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு சென்றுவரும் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஏற்றப்பட்ட மணல் மீது தார்பாய் கொண்டு மூடாமல் அப்படியே சென்று கொண்டுள்ளன. இதனால் லாரிகள் போகும் வேகத்தில் வீசும் காற்றால் லாரியில் உள்ள மணல் பின்னால் வரும் வாகனங்களை ஓட்டி வருபவர்களின் கண்களில் விழுந்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

    மணல் ஏற்றி வரும் லாரிகள் தார்பாய் கொண்டு மணலை மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருந்த போதும், அதனை கடைபிடிக்காமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    மருவூர் மணல் குவாரி இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. அப்படி இருந்தும் கூட மணல் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றனர். உடனடியாக மணல் ஏற்றி வரும் லாரிகள் முறையாக தார்பாய் கொண்டு மூடி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×