என் மலர்

  நீங்கள் தேடியது "compliment"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த 750 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவானது நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அறிவொளி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீ ர்செல்வம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், கல்லூரி செயலாளர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசும்போது, இந்த ஆண்டு உயர்கல்வி படிக்கும் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக த்தில் தான் நடை முறை ப்படுத்தபட்டு உள்ளது. ஒரே ஆண்டில் 21 கல்லூரிகளை தொடக்கி வைத்த பெருமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தான் சேரும் என்றார்.இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஜோதி தேவேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகரன், நகர செயலா ளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஊராட்சி தலைவர் புஷ்ப வல்லி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • வாசிப்பு மாரத்தான் போட்டியில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர்.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி வட்டம் தேசிங்குராஜபுரம் கிராமத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வாசிப்பு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது. இதில், தேசிங்குராஜபுரம் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் வே.ரேவதி வரவேற்றார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தலைவர் மதிப்புறு முனைவர் நா.துரைராயப்பன் தலைமை வகித்தார்.

  வட்டார கல்வி அலுவலர்.பா அறிவழகன், வட்டார கல்வி அலுவலர்இரா. பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ப. வரதராஜன் ஆகியோர் மையத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டு, வட்டார அளவில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் தேசிங்குராஜபுரம் மையத்தில் அதிக அளவில் நட்சத்திரங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், மாணவர்கள் வாசிக்கும் வேகம் அதிகரித்ததையும் பாராட்டி ்பேசினர். பரிசுப்பொருட்களை தனது பிறந்தநாளை முன்னிட்டு மு.துரைமுருகன் மற்றும் நா.துரைராயப்பன் ஆகியோர் வழங்கினர். கோவி.வேதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

  ×