search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yakshala"

    • 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
    • யாகசாலையை தொடர்ந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி அனுக்கை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கடந்த 19-ம்தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. காமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 குண்டங்களும்பரிவார தெய்வங்களுக்கு 10 குண்ட ங்கள் என 43 குண்டங்களில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வேத ஆகமம் திருமுறைகள், இசை பாராயணம் செய்யப்பட்டு தினம்தோறும் 96 வகையான ஹோமப் பொருட்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நிறைவாக 8-ம் கால யாகசாலை பூஜையில் பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு பூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து சிவஸ்ரீ சுவாமிநாதன் சிவாச்சா ரியார் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடத்தில் உள்ள புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி, துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, உள்ளிட்ட ஏராமானவர்கள் கலந்து கொன்டனர்.

    • விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே புஷ்பவனம் ஸ்ரீபூர்ணாம்பிகா, ஸ்ரீபுஷ்களாம்பிகா சமேத காஞ்சியப்பர் சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 13-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகளும் மூன்று கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

    கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹாபூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் தகட்டூர்ஞானசேகர சிவம், சபரிநாத சிவாச்சாரரியார்கள் தலைமையிலான குழுவினர் பூஜீக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமி, அம்பாள், முருகன், சப்தகன்னியர் உப்பட பரிவார சன்னதி கோயில்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிக்கும் மகா அபிஷேகமும் நடந்தது.

    பூஜை மற்றும் விழாக்களில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா, கோவில் திருப்பணி குருவினர்கள் மேரிகாந்த், அன்பழகன், சிவஞானம், செந்தில்குமார், திராவிடமணி உட்பட பிரமுகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராம வாசிகளும் உபயதாரர்களும் கலந்து கொண்டனர். இரவு புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குழுவினாரின் நிகழ்ச்சி நடந்தது.

    ×