search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் கூட்டம் நடந்தது.

    சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

    • சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் அமைக்கவேண்டும்.
    • தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40 அடி அகலம் கொண்ட சாலை அமைத்து தரவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு,

    ராஜசேகரன் (தே.மு.தி.க) சீர்காழி நகரில் சாலையோரம் உள்ள பல உணவகங்கள் கழிவுநீர் பாதையின் மேல் வைத்து கடை நடத்தப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவின் சுகாதாரத்தினை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்திடவேண்டும்.

    காந்திமதி (தி.மு.க) எனது பகுதியில் உள்ள குளத்தினை தூர்வாரவேண்டும். 2-வது, 4-வது குறுக்கு தெருவில் மின்கம்பங்கள் அமைக்கவேண்டும். பொதுகழிப்பிடம் அமைக்கவேண்டும்.

    சூரியபிரபா (பா.ம.க): கழிப்பிட கட்டிடம் கட்டும் பணியை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்யவேண்டும். வாய்க்கால் தூர்வார வேண்டும்.

    ரம்யாதனராஜ் (தி.மு.க) சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தேர் ஓடும் வீதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் கல் அமைக்கவேண்டும்.

    ஜெயந்திபாபு, பிடாரி வடக்குவீதியில் வாணி விலாஸ் பள்ளியிலிருந்து கழுமலையம்மன் கோயில் வரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் திறந்து கிடப்பதால் அதற்கு சிமென்ட் சிலாப் அமைத்து மூடவேண்டும். பாலமுருகன், ஈசானியதெருவில் கொசுதொல்லை அதிகமாக இருப்பதால் கொசுமருந்து அடிக்கவேண்டும்.கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, தனது வார்டில் சாலைகளை சீரமை க்கவேண்டும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தவேண்டும்.

    வேல்முருகன், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர நகர் பகுதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலை வரை 40அடி அகலம் கொண்ட சாலை அமைத்துதரவேண்டும். முழுமதிஇயமவரம்பன், பனமங்கலத்தல் உள்ள குளத்தை தூர்வார வேண்டும்.

    முபாரக், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே பாரத வங்கி அமைந்துள்ள தேர்வடக்குவீதி சாலையில் மழைகாலத்தில் குளம்போல் சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதாரசீர்கேடு ஏற்படுவதை தடுக்க சீரமைப்பு பணிகளை தொடங்கவேண்டும். நித்தியாதேவி, எனது வார்டில் சாலையில் மழைநீர் தேங்காதவாறு சாலை அமைத்துதரவேண்டும் என்றார்.

    Next Story
    ×