என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கார்களில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    மதுபானம் கடத்தி வந்து கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கார்.

    2 கார்களில் கடத்தி வந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்

    • காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது.
    • புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் விழுப்புரம் மாவட்டம் மத்திய புலனாய்வு பிரிவு மது விலக்கு இன்ஸ்பெக்டர் (பொ.திருச்சி மண்டலம்) புயல்.பாலச்சந்திரன் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் இணையத் பாட்ஷா, புலனாய்வு அமலாக்கப் பிரிவு போலீசார் சார்லஸ், திவாகர், இளந்திரையன், மகாமார்க்ஸ் ஆகியோர் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த 2 கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் கார்கள் வேகமாக செல்ல முயன்றது. சுதாரித்த போலீசார் தடுப்பு அமைத்து கார்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் 50 அட்டை பெட்டிகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2400 பாட்டில்கள் இருந்தன.

    மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.15 லட்சம் மதிப்பு கொண்ட 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானம் கடத்தி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த ரகு, கவுதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார். சோமுராஜ், சண்முகம் ஆகிய 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விசாரணையில் காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடி பகுதிக்கு மதுபானம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    Next Story
    ×