என் மலர்
மயிலாடுதுறை
- அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும்.
- கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும்.
எனவே மத்திய அரசு கர்நாடக அரசின் உதவியை பெற்று அதற்கான பணியை தொடங்கிட வேண்டும். காவிரியில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு மேட்டூர் அணை உள்ளது. அதற்கு மேல் வரும் தண்ணீர் அனைத்தும் கடலுக்குத் தான் செல்ல வேண்டும். அணை கட்டினால் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். கரூர் முதல் பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து ஆறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரம் வரை இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும். இந்த முறை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் வெளியேற்றப்படுகிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் 5 லட்சம் கன அடி தண்ணீர் செல்லும் ஆற்றில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலை மேட்டுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களில் ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் முற்றிலும் அழிந்து இருக்கிறது. குடிசை வீட்டிற்கு ரூ25 ஆயிரம், ஓட்டு வீட்டிற்கு ரூ50,000 வீதம் நிவாரணம் வழங்கி மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து மேடான பகுதிகளில் மனைபட்டா வழங்கி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ளவர்களை குடிமாற்றம் செய்து வீடு கட்டி கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள் அதனை செய்ய வேண்டும். கொள்ளிடம் பகுதியில் 3வது முறையாக தோட்டப்பயிர்கள் பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம் உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு முதல் அமைச்சர் முழு முயற்சி செய்து விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும்.
வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு போர்க்கால அடிப்படையில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
- பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
சீர்காழி:
அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.
- திட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் சூழ்ந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்புஅலுவ லரும், குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்இயக்குநருமான அமுதவல்லி அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்த ப்பட்டு வரும் பணி மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்க ளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு சமைக்கப்படும் உணவு தரம் உள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மயிலாடு துறை கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று ஒவ்வொரு விநாயகர் சிலையாக சீர்காழி உப்பனாற்றுக்கு கொண்டு செல்கின்ற நிகழ்ச்சி நடந்தது அப்பொழுது சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைக்க கொண்டு வரப்பட்டது.
விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டது.
இதனால் விநாயகர் சிலை கரைப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து மேலும் விநாயகர் சிலைகள் வந்த வண்ணம் இருந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்க தூக்கி சென்று உப்பனாற்றில் சென்று கரைக்க உதவினர்.
- ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவியுடன் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம் மடாதிபதிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
துலா கட்ட விஸ்வநாதர், திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் துலா கட்டம் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது.
தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவி உடன் புதிதாக கோயில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.
தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியர் தலைமையில் 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாகுதி உடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனித நீர் அடங்கிய கரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏழுநிலை ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களின் மூலவர் சிலைகளுக்கு மகா கும்பாபிபிஷேகம் செய்யப்பட்டது.
தருமபுர ஆதீன மடாதிபதிஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடா திபதி, மற்றும் திருப்பனந்தாள் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள், ராஜகுமார் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் குண்டாமணி, கவுன்சிலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
- பல்வேறு கோவில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
- குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 முதல் 7 அடி வரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறையில் 41 இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவ ட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபா ட்டிற்காக வைக்கப்பட்டன.
மயிலாடுதுறையில் செம்மங்குளம் முனீஸ்வரர் ஆலயத்தில் எழுச்சி விநாயகர், மாயூரநாதர் கீழவீதி;
பரிவார விநாயகர் மற்றும் காமதேனு விநாயகர், குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில்;
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-ஆம் நாளான நேற்று ஊர்வமாக முக்கிய நகர சாலை வழியாக துலா கட்டம் வந்தடைந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி பொதுச் செயலாளர் சுவாமிநாதன், முத்துக்குமார், பாஜக ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்ந டைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
- அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சீர்காழி,
கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை அணை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றல் திறந்து விடப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரி த்துள்ளதால் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள திட்டு கிராம ங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல், கோரத்திட்டு உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் அத்தியாவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு ஆற்றின் கரை மற்றும் முகாம்களை நோக்கி வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.
ஆற்றின் கரை பகுதியில் மேடான பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும் நேற்று இரவிலிருந்து சிலர் தங்கி உள்ளனர்.
வருவாய்த்துறை சார்பில் நான்கு இடங்களில் முகாம் அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்.முகாம்களுக்கு அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்களுக்கு தேவையான சுகாதார வசதி, உள்ளிட்ட உதவிகளை செய்திட மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் முதலை மேடுதிட்டு கிராமத்திற்கு நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு வருமாறும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிச் சென்று பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் அளக்குடி பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் மெய்யநாதன் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் கரையின் பாதுகாப்புத் தன்மை குறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி சுமதியிடம் அமைச்சர் நிதி உதவி வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் லலிதா, எம் .எல். ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதாமுருகன், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி.டி.ஓ சரவணன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
- பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரை பலவீனமாக உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கரை மெலிந்துள்ள பகுதிகளில் மணல் முட்டைகளை அடுக்கி பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது.
அப்போது கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்து சரி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து கரையை ஒட்டி அங்கேயே தயார் செய்யப்பட்ட மணல் மூட்டைகளை அடிக்கி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கொள்ளிடம் ஆற்றின் மற்ற பகுதிகளில் பலவீனமான கரைப்பகுதியை பலப்படுத்தும் வகையிலும் பிரதான புது மண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை போட்டு சரி செய்யும் பணியில் 5000 மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- பேரூராட்சிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாலையில் மழைக்காலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் அன்பு செழியன், செயல் அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட விவாதம்நடந்தது.அன்பு செழியன் (துணைத் தலைவர்) :
வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் கடந்த ஒரு வாரமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பஸ்கள் சென்று வருகிறதா என பேரூராட்சி சார்பில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும்.
பேரூராட்சிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
அவற்றைக் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகேயன் (அதிமுக) பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு எதிர்ப்புறம் அதிகளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புங்கனூர் சாலையில் மழைக்காலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வித்யா தேவி பேசுகையில் மருவத்தூர் மயான சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
அவற்றை சீரமைக்கவும், மயானத்தில் தண்ணீர் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா கூறுகையில் தங்களுடைய வார்டுகளில் பணிகள் செய்யும்போது அவற்றை முன்கூட்டி கவுன்சிலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மீனா ஐந்தாவது வார்டு இந்திரா நகரில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
ஆனந்த் வைத்தீஸ்வரன் கோவிலை சுற்றி அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதில் அளித்து தலைவர் பேசுகையில் வைத்தீஸ்வரன் கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வடிகால் வசதி அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- விவசாயிகளுக்கு நெல் ஜெயராமனின் மரபுசார் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமை வகித்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், செம்பனார்கோயில் வட்டார உதவி இயக்குனர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடத்தை திறந்து வைத்து 10 -க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நெல் ஜெயராமனின் மரபுசார் பாரம்பரிய நெல் விதைகளை வழங்கி பேசினார்.
இதில் குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன், உதவி அலுவலர் உமாபசுபதி, ஜெயக்குமார், உதயசூரியன், திமுக. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா கண்ணன் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரிசி, மாவு, தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
- ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.
தரங்கம்பாடி:
ஒன்றிய பிஜேபிஅரசின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து செம்பனார்கோயில் பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.
போராட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தாங்கினர்.
அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது.
அரிசி மாவு தயிர் வெண்ணை நெய் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும்.
ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.
உயிர் காக்கும் மருந்து மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.
மின்சார விநியோகத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழ ங்காதே. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.
நிகழ்ச்சியில் வேதநாயகம், சின்னத்துறை, இராதா கிருஷ்ணன், தவசிமுத்து, தரணி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
- இவருக்கும் இவரது மனைவி ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன் (வயது 62). அறிவழகனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்துள்ளார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெயினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணியாற்றிய இவர் கடந்த ஓராண்டாக ஊரிலேயே தங்கியுள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கும் இவரது மனைவி ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு வந்த அறிவழகனின் உறவினர்கள் ஜெயினா பீவி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியபடி இறந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெரினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் ஜெயினா பீவி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அதனைக் கண்டு மனம் உடைந்த அறிவழகன், மனைவி கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.






