search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.

    தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவியுடன் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேகம் 150 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம் மடாதிபதிகள் பங்கேற்றனர்.

    மயிலாடுதுறை காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

    துலா கட்ட விஸ்வநாதர், திருவழந்தூர் விஸ்வநாதர், வள்ளலார் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பெரிய கோயில் விஸ்வநாதர், கூறைநாடு விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

    இவற்றில் துலா கட்டம் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது.

    தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவி உடன் புதிதாக கோயில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது.

    தொடர்ந்து 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியர் தலைமையில் 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாகுதி உடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    புனித நீர் அடங்கிய கரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏழுநிலை ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களின் மூலவர் சிலைகளுக்கு மகா கும்பாபிபிஷேகம் செய்யப்பட்டது.

    தருமபுர ஆதீன மடாதிபதிஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடா திபதி, மற்றும் திருப்பனந்தாள் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள், ராஜகுமார் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் குண்டாமணி, கவுன்சிலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×