கொள்ளிடத்தில், அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் இனிப்பு வழங்கினர்.
கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் இனிப்பு வழங்கினர்.
Published on

சீர்காழி:

அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com