என் மலர்tooltip icon

    மதுரை

    • 8-ந்தேதி மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
    • 7-ந்தேதி மாலை 4.54 மணிக்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    இதனால் அன்றைய தினம் கோவில் நடையானது, காலை 9 மணி அளவில் சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிவுற்ற பின் இரவு 7.31 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.

    மேலும் 7-ந்தேதி பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் அன்று மாலை 4.54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிப்பட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது.
    • எதிர்பாராத விதமாக மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் பேரூராட்சி கவுன் சிலர் வீடு இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நல்லம்மாள் (வயது 62). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு பக்கத்து வீட்டில் உள்ள மகனை பார்ப்பதற்காக எழுந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விடிய, விடிய பெய்த மழையால் மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் இடுபாடுகளுக்குள் சிக்கின.

    அதேபோல் நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் கருவறை வரை 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து தெப்பக்குளமாக காட்சியளித்தது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து பின்னர் வடிந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் வயல்வெளிகள், தென்னந் தோப்புகளில் மழைநீர் தேங்கி வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

    • திருமங்கலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அப்போது விக்னேஸ்வரன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பிணியானார். மகள் 7மாத கர்ப்பிணியாக உள்ளதை அறிந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இது குறித்து அவர்கள் நாகையாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

    • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ''டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, ''அதிக சம்பளம்'' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

    இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்ப்டடால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உசிலம்பட்டியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் உடைந்தது.
    • இதனால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேக்கிழார்பட்டி தெற்கு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சில்லாம்பட்டி ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. மேக்கிழார்பட்டி-பசும்பொன் நகர் பகுதியில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முதலைக்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாசில்தார் கருப்பையா தலைமையில் அடைப்புகளை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    • சந்திரகிரகணம் 8-ந்தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது.
    • வருகிற 7-ந்தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்திரகிரகணம் வருகிற 8-ந் தேதி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும். மேலும் அன்றைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும்.

    இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வருகிற 7-ந் தேதி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.
    • டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சி பட்டியை அடுத்துள்ள வாடி கருப்புக்கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 32). இவர் உசிலம்பட்டியில் உள்ள நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் அரசு பஸ் மற்றும் ஷேர்ஆட்டோக்களில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை வேலைமுடிந்து தங்கபாண்டி ஊருக்கு புறப்பட்டார். இதற்காக உசிலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த வாசிநாதன் என்பவர் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ அங்கு வந்தது. அளவுக்கு மீறி அதில் பயணிகள் பயணித்தனர். இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் தங்கபாண்டி டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

    உசிலம்பட்டி ரோடு, மாமரத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. அப்போது டிரைவர் சீட்டில் பயணித்த தங்கபாண்டி தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் குமார் போசுக்கு ஓய்வூதிய பணம் வந்தது. இதனை சரவணகுமார் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    நேற்று இரவு இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணகுமார் தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி காலால் மிதித்தார்.

    இதில் குமார் போஸ் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமார் போஸ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தார். பணத்திற்காக தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்கள் பிரச்சினையை தெரிந்து கொள்ள மென்பொருள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும்.

    மதுரை

    மதுரை மகபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாப்பாளையம் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஜுவாகிருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3-வது தளத்தில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மையத்தில் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சேவைைய தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியின் பொது மக்களுக்கான சேவையில், இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமான பணி. இதற்கு ஒரு கட்டமைப்பு அமைய வேண்டியது முக்கியம். மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நிறைவேறாத பிரச்சினைகள்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

    பொது மக்களும் கோரிக்கை மீதான நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும். மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிய கமிஷனருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் புகாருக்கான தனி அடையாள எண் பெறுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அடுத்தபடியாக கவுன்சிலர்கள் வாரம் ஒரு முறை மென்பொருள் சேவை மூலம் பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை எழுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் மகளுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முத்து ராஜா புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மாமனார் பிரபாகரன் (48), மாமியார் பிச்சைமணி (45) மற்றும் மகன் பிரபு (28) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று முத்துராஜா வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு கம்பி, மண்வெட்டியால் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    எனவே முத்துராஜா இதுதொடர்பாக, எழு மலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பிரபாகரன் மற்றும் பிச்சைமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதே வழக்கில் பிச்சை மணி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜாவை யும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×