என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கிறது.
    • அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் விருப்பமாக உள்ளது.

    மதுரை :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்டாக இருக்கிறது. அந்த பட்ஜெட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு அதை முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் நிறுவுவது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரிக்க கேட்டிருக்கிறேன். பேனா சின்னம் நிறுவும் இடம் குறித்தும், சுற்றுப்புற ஆய்வாளர்கள் கருத்து, மீன்வளம் உள்ளிட்டவை குறித்தும் சில தகவல்களை கேட்டிருக்கிறேன். இதுபோல், மீனவர்களின் கருத்தையும், பல்வேறு மீனவ சங்கங்களின் கருத்துக்களையும் நேரடியாக கேட்டு அறிய இருக்கிறேன். அதன்பிறகு, அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிப்பேன்.

    மதுரை எய்ம்ஸ் குறித்து, மத்திய பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் பதில் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அ.தி.மு.க. வழக்கில் இடையீட்டு மனுவுக்கான பதில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வழக்கு நாளை (அதாவது இன்று) வருகிறது.

    அ.தி.மு.க. சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2026 வரை பதவிக்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள், பா.ஜனதாவின் விருப்பமாக உள்ளது. அதுதான் எனது விருப்பமும்கூட. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களின் வேட்பாளருக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதா? என ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டபோது, "சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். அதற்கு முன்னதாக முறையான அறிவிப்பு உங்களுக்கு தெரிவிக்கப்படும்" என்றார்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மதுரையில் வருகிற 6-ந்தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

    எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரளாக வர வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவசிலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்த அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரூபி மெட்ரிக் பள்ளியில் வருகிற 4-ந்தேதி விளையாட்டு விழா நடக்கிறது.
    • மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் ரூபி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாடக்குளத்தில் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிகளின் விளையாட்டு விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி டி.எஸ்.பி. பேசுகிறார். இந்த விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர்.

    விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தா தேவி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு ஐராவதநல்லூரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது மணமகள் அறையில் புகுந்த மர்ம நபர் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக திருப்பரங்குன்றம் சமூக நல அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

    அவர் இதுதொடர்பாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது 9-ம் வகுப்பு மாணவியை சட்டவிரோத மாக கீழக்குயில்குடியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகன் செல்வகுமார் (23) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி முத்துலட்சுமி, திருப்ப ரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 

    • மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அப்பள சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக எந்த திட்டமும் இல்லை. தேசிய சாலை போக்குவரத்து திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதில் பரமக்குடி-ராமேசுவரம் சாலையை சேர்க்க வேண்டும். உழவன் நல நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.11.40 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். விவசாய துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்குவது மகிழ்ச்சி தருகிறது.

    ஒரே நாடு ஒரே வரி அதுவும் 5 சதவீத வரியே என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை. தேசிய வணிகர்நல வாரியம் இன்று வரை செயல்முறைக்கு வரவில்லை. வணிகர்களுக்கான ஓய்வூதியம் அறிவிப்போடு நின்று விட்டது. தேசிய அளவில் வருவாய் ஈட்டித் தரும் அப்பள வணிகர்களின் வாழ்வாதாரம், குடும்ப நலனைக் காக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நாராயணசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள மகா கணபதி கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 30-ந் தேதி அனுக்கை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வேத விற்பனர்கள் 9 யாக குண்டத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 3-ம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. நாட்டின் பல்வேறு புனித நதிகளில் இருந்து புனித நீர் குடங்களில் கொண்டு வந்து கோபுர கலசங்களில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் சங்கரநாராயணன் சீனிவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

    அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் இந்த தாக்கம் இன்று காணப்பட்டது அதிகாலை முதல் கருமேகங்கள் வானில் சூழ்ந்து சூரியனை மறைத்ததுடன் வாட்டி வதைத்த வெயிலுக்கும் இன்று 'குட்பை' சொல்லும் வகையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    மதுரை நகரில் விமான நிலையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், காமராஜர் சாலை, தெப்பக்குளம், அவனியாபுரம், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    திடீர் மழை காரணமாக சில நாட்களாக இருந்த வெப்பமும் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    • கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தை மாத பவுர்ணமி வருகிற 5-ந் தேதியும், பிரதோஷத்தை முன்னிட்டும் நாளை (3-ந்தேதி) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் கோவில் பகுதியில் தங்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.

    சதுரகிரி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் நாளை மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், சர்தன் (12) என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு சுரேஷ் தனது மகனுடன் தென்பரங்குன்றம் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 பேர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேசை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தென்பரங்குன்றத்தை சேர்ந்த டேவிட்ராஜா என்பவரின் மகன் தீனதயாளன். கட்டிட தொழிலாளியான இவர், அந்த பகுதியில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை சுரேஷ் கண்டித்து வந்திருக்கிறார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுரேஷ் தனது மகனுடன் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு தீனதயாளன், தனது நண்பர்களான விக்னேஷ்வரன், சிங்கராஜா ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். சுரேசை பார்த்த அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் தனது நண்பர்களுடன் சுரேசுடன் தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் வாள் மற்றும் கத்தியால் சுரேசை அவரது மகனின் கண்முன் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீனதயாளன், விக்னேஷ்வரன், சிங்க ராஜா ஆகிய 3 பேர் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×