search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையை குளிரவைத்த சாரல் மழை
    X

    மதுரையை குளிரவைத்த சாரல் மழை

    • மதுரையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

    அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் இந்த தாக்கம் இன்று காணப்பட்டது அதிகாலை முதல் கருமேகங்கள் வானில் சூழ்ந்து சூரியனை மறைத்ததுடன் வாட்டி வதைத்த வெயிலுக்கும் இன்று 'குட்பை' சொல்லும் வகையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    மதுரை நகரில் விமான நிலையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், காமராஜர் சாலை, தெப்பக்குளம், அவனியாபுரம், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    திடீர் மழை காரணமாக சில நாட்களாக இருந்த வெப்பமும் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.

    Next Story
    ×