search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்
    X

    மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

    • திருமங்கலம் அருகே மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நாராயணசாமி நகர் பகுதியில் அமைந்துள்ள மகா கணபதி கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 30-ந் தேதி அனுக்கை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வேத விற்பனர்கள் 9 யாக குண்டத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 3-ம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடு நடந்தது. நாட்டின் பல்வேறு புனித நதிகளில் இருந்து புனித நீர் குடங்களில் கொண்டு வந்து கோபுர கலசங்களில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தினை நடத்தினர். அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டு அருள் பாலித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் சங்கரநாராயணன் சீனிவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×