பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்
Published on

மதுரை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு ஐராவதநல்லூரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது மணமகள் அறையில் புகுந்த மர்ம நபர் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com