என் மலர்
மதுரை
- மதுரை விமான நிலைய சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர்.
- இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெருங் குடி பகுதியில் உள்ள விடு தலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலமாக மாலை அணி விக்க வந்தனர்.
அவர்கள் செல்லும் பாதையில் பிரச்சினை ஏற்படலாம் என கருதிய போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்லுங்கள் என கூறினர். ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுப்பு தெரிவித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. வசந்த குமார் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
- கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்ணஆகார்ஷன பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.
மதுரை
தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்தது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.
விழாவைத்தொடா்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யா ணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதி யும், கள்ளழகருக்கு எதிர் சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ள ழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது.
வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் இடமான ஆழ்வாா்புரம் பகுதியில் செய்யப்ப உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீா் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் இன்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் அற நிலையத்துறை, கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.
- மதுரை அருகே இளம்பெண் திடீரென மாயமானார்.
- மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகலை பரும்பு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள்கள் ராமலட்சுமி(வயது17), விஜயலட்சுமி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு ஜோதி தனது மகள்களை பஸ்சில் ஊருக்கு அழைத்துச்சென்றார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ராமலட்சுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்த விவசாயிகள்.
- இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப் பட்டது.
மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சித்திரை திருநாளான இன்று திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி இன்று விவசாயம் செழிக்க வேண்டி தார் குச்சியில் பூச்சூடி திருப்பரங் குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் உழுது சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கிரிவலமாக வந்து மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோயில் பகுதியில் விவசாயி கள் அனைவரும் அமர்ந்து இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.
தங்களது பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினை களை பேசி தீர்த்தனர். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கிரிவலம் சுற்றி கோவில் வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனையானது.
- கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது அவர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரே சுவரருக்கு பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலை கள், வேஷ்டி கள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைத்துள்ளது? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வந்த பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் வகை யில் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 கிடைத்து உள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம், கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருடி சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை பைபாஸ் ரோடு சாலினி தெருவை சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்வர் (31). இவர் இரவு காரில் அண்ணா நகருக்கு சென்றார். அவர் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பேக் மற்றும் 8 சாவிகளை திருடி சென்றனர். மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (30). இவர் காரில் கே.கே.நகருக்கு வந்தார். அப்போது மில்லினியம் மால் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் பின்பக்க கதவை உடைத்து ஏ.டி.எம். கார்டு, 2 செல்போன்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 700 ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆதித்ய விக்னேஷ்வர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- வறுமையை வெல்ல படிப்புதான் பேராயுதம் என பொன்.மாணிக்கவேல் பேசினார்.
- நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும்.
மதுரை
மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்க வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும். கல்லூரி பருவம் என்பது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் முக்கியமான முதல் படி.
வறுமையை வெல்லும் வகையில் உங்களின் கற்றல் திறன் அமைய வேண்டும். அதற்கு படிப்புதான் பேராயுதம். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையைப் பெற்றுக் கொண்டு அதில் திறமை களை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னே றுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாக ரத்தினம், செயலாளர் ஜெக தீசன், முதல்வர் ராஜேஷ் குமார், துணை முதல்வர் சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் தக்காளி பாபு (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தக்காளி பாபு நள்ளிரவு ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தக்காளி பாபு, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளிபாபுவை தாக்கிய பாலாஜி (25), அவரது சகோதரர் முத்துப்பாண்டி (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மதுரை முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காசி (59). கட்டிட தொழிலாளி. இவர் பைக்காரா பால நாகம்மாள் கோவிலுக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் அங்கு வந்தார். அவர் காசியிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்தால் ஆத்திரமடைந்த சின்னதுரை இரும்பு கம்பியால் காசியை தாக்கினர். இதுபற்றி காசி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று மாலை நடக்கிறது.
- தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
- மதுரை- கச்சிகுடா இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
- கச்சிக்குடாவில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், செவ்வாய்க்கிழமை இரவு 8;45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரை
மதுரை-கச்சிகுடா இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
அதன்படி வருகிற 17, 24-ந்தேதி, மே 1, 8, 15, 22, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை தோறும் கச்சிக்குடாவில் இருந்து இரவு 8;50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்;07191), செவ்வாய்க்கிழமை இரவு 8;45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து 19, 26, மற்றும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புதன் கிழமை தோறும் அதிகாலை 5;30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பி ரஸ் ரெயில் (வண்டி எண்: 07192) வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு கச்சிக்குடா செல்லும்.
இந்த ரெயில்கள் குண்டூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும்.
- மதுரை சித்திரை பெருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வைபவம் மே 2-ந்தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே1-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வைபவம் மே-2 ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். மே 3-ந் தேதி மாசி வீதிகளில் தேர் திருவிழா நடைபெறுகிறது. 4-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வலம் வருவர். அவ்வாறு வலம் வரும் பகுதிகளான விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுவாமிகள் வலம் வரும் பகுதிகளான தெற்குமாசி வீதியில் கடந்த சில நாட்களாக சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பாதைகளான டவுன்ஹால் ரோடு, மேலகோபுரத்தெரு, மாசி வீதிகள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனை உடனே சீரமைக்க வேண்டும். இது தவிர சாலைகளில் குறுக்கே பல இடங்களில் தனியார் நிறுவன கேபிள் வயர்கள் செல்கிறது.
மேலும் மின்வாரிய வயர்களும் ஒரு சில இடங்களில் தாழ்வாக இருக்கிறது. அதனையும் சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






