என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை- கச்சிகுடா இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    மதுரை- கச்சிகுடா இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்

    • மதுரை- கச்சிகுடா இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • கச்சிக்குடாவில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், செவ்வாய்க்கிழமை இரவு 8;45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

    மதுரை

    மதுரை-கச்சிகுடா இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 17, 24-ந்தேதி, மே 1, 8, 15, 22, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை தோறும் கச்சிக்குடாவில் இருந்து இரவு 8;50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்;07191), செவ்வாய்க்கிழமை இரவு 8;45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து 19, 26, மற்றும் மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புதன் கிழமை தோறும் அதிகாலை 5;30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பி ரஸ் ரெயில் (வண்டி எண்: 07192) வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு கச்சிக்குடா செல்லும்.

    இந்த ரெயில்கள் குண்டூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும்.

    Next Story
    ×