என் மலர்
மதுரை
- கொடைக்கானல் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வந்தார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் வருகிறார். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வத்தலக் குண்டு வழியாக கொடைக்கா னலுக்கு மாலை 4.30 மணிக்கு செல்கிறார். எனவே மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இன்று இரவு கொடை க்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார்.
பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை வரும் கவர்னர், இங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கா னலுக்கு செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது. கவர்னர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. மதுரை வி மான நிலையம் மற்றும் கவர்னர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் ேடாங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஆதித்தமிழர் பேரவை கூட்டம் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாடிப்பட்டி
மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பேத்செல்வம், நிதிச்செயலாளர், பகலவன், கொள்கை பரப்புச் செயலாளர், சாந்தி முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சிறுவாலை செல்வபாண்டி வரவேற்றார்.
தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் பேசினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கவுரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதி அழகன், துணைத் தலைவர் சரவணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஆதிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றுவிழா நடத்துவது, மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
- கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.
அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
- உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையப்பட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, மு.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி. மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.
உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம்புதூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிவதாக செக்கானூரணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றிதிரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் தார்ப்பாய் முருகன் கோஷ்டியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கடந்த 1998-ல் மோதல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரமேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ்குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
கடந்த 22 ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்தநிலையில் ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிவதாக செக்கானூரணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றிதிரிந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
அவரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசில் சிக்கிவிடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் ரமேஷ்குமார் சுற்றி திரிந்துள்ளார்.
விசாரணைக்கு பின் அவரை மதுரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாலிபர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த செக்கானூரணி போலீசாரை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.
- விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான தோட்டத்தை அதே ஊரை சேர்ந்த தர்மர் என்பவர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தர்மர் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக தெரிகிறது.
தர்மரின் தோட்டத்துக்கு அம்பாசமுத்திரம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான மணி(வயது70), ஆசை பாண்டி(35) ஆகிய இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.
இதனால் அவர்கள் இருவரையும் தேடி அவர்களது உறவினர்கள் தர்மரின் தோட்டத்துக்கு நேற்று சென்றனர். அப்போது அங்கு மணி, ஆசைபாண்டி ஆகிய இருவரும் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தனர். இருவரது உடலும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
வேலைக்கு சென்றவர்கள் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை பார்த்த இருவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில் தர்மர் தனது கரும்பு தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தர்மரை போலீசார் கைது செய்தனர்.
- எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும்; ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
- தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தேர் இழுத்து வழிபட்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது. அவரால் மட்டுமே தொண்டர்களை வழிநடத்தி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். இதற்காக அவரது உத்தரவின் பேரில் கட்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்.
ஒரு சிலரை தவிர அனைவரும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். இங்கிருந்து போனவர்களும் விரைவில் இரட்டை இலை இருக்கக்கூடிய எங்களிடம் வந்து சேருவார்கள்.
தமிழக அமைச்சரவை மாற்றம் ஏமாற்றமானது. தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., பகுதி துணை செயலாளர் செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர் தவமணி மாயி, வட்ட செயலாளர்கள் பொன்முருகன், பாலா, நாகரத்தினம் எம்.ஆர்.குமார் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.
- மதுரையில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை புதூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
பாரதி உலா ரோடு, ஜவகர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய்ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ரேடியோ நிலைய குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி.
சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு (இ.பி. குவாட்டர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டிஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவாட்டர்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகான் ரோடு.
கமலா முதல் மற்றும் 2-வது தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனக வேல்நகர், பழனிச்சாமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
பெரியார் பஸ் நிலையம்
மதுரை எல்லீஸ் நகர் துணைமின் நிலையத்தில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
எல்லீஸ் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், (எம், எச், டி, ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள்.
டி.பி. ரோடு, ெரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி. ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட் மெண்ட்ஸ், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட்டு வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில செயலாளராக அந்தோணிராஜ் நியமனம் செய்யப்பட்டார்.
- பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
மதுரை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை தலைவர் மைக்கேல்ராஜ் பரிந்துரையின்படி மாநில தலைவர் முத்துகுமார், மண்டல துணைத் தலைவராக பணியாற்றிய குட்டி என்ற அந்ேதாணிராஜை, மாநில செயலாளராக நியமித்துள்ளார்.
அவரை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர்சிவா, மாநில இளைஞரணி தலைவர் ஜெயபால், மதுரை மண்டல, மாநில நிர்வாகிகளான மரிய சுவீட்ராஜன், குணஜீசஸ், வாசுதேவன், பிரபாகரன், கரண்சிங், ஜெயகுமார், தேனப்பன் மற்றும் பகுதி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
- வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.
- கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.
பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருடு போனது.
இதேபோன்று தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்த சுரேஷ்குமாரின் (42) பைக்கும் திருடு போனது. இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
- பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
- 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் மனைவி அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயி ருந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், உடனே பஸ்சில் இருந்து இறங்கி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா நகை திருடியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.
பஸ்சில் பயணித்து வந்தவர்களில் யாரோ தான் நகையை திருடிவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று கருதிய போலீசார், பஸ் நிறுத்தப்பட்ட நிறுத்தங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள், மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் அவச ரமாக இறங்கிச்செல்வது அதில் பதிவாகியிருந்தது.
அந்த நபர்கள் தான், பெண்ணிடம் நகைகளை திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் நகையை பறி கொடுத்தவரும், அந்த 2 நபர்களும் பஸ்சில் தங்களின் அருகில் நின்றி ருந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யதில் அவர்கள் அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம் பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை(42) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
- சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.
அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.






