

திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தேர் இழுத்து வழிபட்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது. அவரால் மட்டுமே தொண்டர்களை வழிநடத்தி அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். இதற்காக அவரது உத்தரவின் பேரில் கட்சி பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்.
ஒரு சிலரை தவிர அனைவரும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். இங்கிருந்து போனவர்களும் விரைவில் இரட்டை இலை இருக்கக்கூடிய எங்களிடம் வந்து சேருவார்கள்.
தமிழக அமைச்சரவை மாற்றம் ஏமாற்றமானது. தி.மு.க.வின் ஊழலை மறைப்பதற்காக அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., பகுதி துணை செயலாளர் செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர் தவமணி மாயி, வட்ட செயலாளர்கள் பொன்முருகன், பாலா, நாகரத்தினம் எம்.ஆர்.குமார் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.