என் மலர்tooltip icon

    மதுரை

    • பெரியார் பஸ் நிலையத்தில் கேனுடன் சுற்றிய மர்ம வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

    மதுரை

    தூங்கா நகரமான மதுரைக்கு 24 மணி நேரமும் வெளியூர், உள்ளூர் மக்கள் வந்து செல்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் வெளியூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அதிகாலை 2.30 மணி அளவில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இரவு நேர பஸ்களில் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பெரியார் பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் திருமங்கலம் செல்லும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆரப் பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய இடங்களுக்கு ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் திருமங்கலத்துக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

    சித்திரை திருவிழாவை யொட்டி இரவு நேரத்தில் மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத் துக்கு பஸ்கள் இயக்கப்பட் டன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பயணி கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பெரியார் பஸ் நிலையத்தில் திருமங்க லம் பஸ் நிலையத்துக்கு காத்திருந்தால் ஒரு மணி நேத்திற்கு ஒரு பஸ்தான் வருகிறது. அதுவும் சில நாட்களில் செயல்படுவ தில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்த பயணிகள் திருமங்கலம் பஸ்சுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

    அதிகாலை 3 மணிய ளவில் மேல்சட்டை அணி யாத வாலிபர் ஒருவர் ஒரு கேனை தோளில் வைத்தபடி பஸ் நிலையத்தை பலமுறை சுற்றி வந்தார். அந்த கேனில் ஏதோ ஒரு திரவம் இருந்தது. அது பெட்ரோலா? மண் எண்ணையா,? தண்ணீரா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் குடிபோதை யில் இருந்ததாக தெரிகிறது. அவரது உடலில் திரவம் சிந்தி இருந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்ட வரா? என்றும் சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் பெரியார் பஸ் நிலை யத்தில் போலீஸ் வாகனம் இருந்த போதிலும் போலீசாரை காணவில்லை. அவர்கள் வேறு பகுதிக்கு ரோந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதற்கிடையே கேனுடன் சுற்றிய வாலிபர் தீக்குளிப்ப தற்காக இப்படி செல்கி றாரா? என்று பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதனை கவனித்து நட வடிக்கை எடுக்க போலீசார் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். எனவே பெரியார் பஸ் நிலையத்தில் 24 மணி நேர மும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் தான் சமூக விரோதிகள் அங்கு வரு வதை தவிர்ப்பார்கள் என்று பயணிகள் தெரிவித்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் திருமங்க லத்தில் பயணிகளை இறக்கி விட்டு ரிங் ரோடு வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்கின்றன.

    திருமங்கலத்தில் நள்ளி ரவு நேரத்தில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து பெரி யார் மற்றும் ஆரப்பாளையம் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கைக்குழந்தை களுடன் பெண்கள் பஸ்சில் நின்றபடி பயணிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அதிக மான பஸ்களை இயக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் திருப்ப ரங்குன்றம், திருமங்கலம் பஸ்கள் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் ஆரப்பாளையம் சென்று திருமங்கலம் பஸ்சை பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ள தால் கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

    • நாகையாபுரம் அருகே ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் சபரிமலை கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது. இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

    • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 2 பெண்கள் குழந்தைகளுடன் மாயமாகினர்.
    • மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் மாயண்டி. இவரது மகள் ரோஜா (வயது33). இவர் தனது கணவர் மணி என்பவருடன் 10 ஆண்டுகளாக கோயம்புத்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா சில மாதங்களுக்கு முன்பு மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவரது தோழி காமராஜர் வடபகுதியை சேர்ந்த காயத்திரி(27) என்பவரும் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரும், கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ரோஜா, மகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரோஜா மாயமான, அதே நாளில் காயத்திரியும் தனது 2 குழந்தைகளுடன் மாயமாகி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டுபோனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது37). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக திருமங்கலம் நகர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை இந்த நிறுவ னத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சாலை யோரங்களில் கம்பி, பிளாஸ்டிக் பைப்கள் வைக்கப்பட்டிருந்தன.

    சம்பவத்தன்று திருமங்க லம் நகர் பகுதியில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டி ருந்த 1,500 மீட்டர் பிளாஸ்டிக் பைப்கள், 30 இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் சந்தோஷ் திருமங்கலம் நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் தைக்கூடம் விட்டிலாவை சேர்ந்தவர் கார்த்திக்(19).

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மண்ணாடிமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்தார்.

    சமயநல்லூர் மகளிர் ேபாலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கலெக்டருக்கு சிபாரிசு செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் அனீஷ்சேகர் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க உத்தர விட்டார்.

    இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் விஜய ராஜன். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 22). பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்த அவர், இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளம் மீனாட்சி தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் ஆனந்தகுமாரை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.

    ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆனந்த குமாரை விடாமல் துரத்தி சென்று நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மதுரை சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அவர்களுக்குள் கடுமையான மோதல் நடந்ததும் தெரியவந்தது.

    அந்த மோதல் சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக ஆனந்தகுமாரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தகுமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நேரம் பகல் நேரத்தில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகும். இன்றும் அதேபோல் அந்த வழியாக ஏராளமானோர் சென்றபடி இருந்தனர்.

    அந்த நேரத்தில் ஆனந்த குமாரை கொலையாளிகள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். ஆனந்த குமாரை மர்ம நபர்கள் வெட்டியதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பயத்தில் அலறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினர்.

    ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரையில் மழை பெய்தால் சகதிக்காடாகும் மாநகர சாலைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்



    செல்லூர் 60 அடி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந்தேதி நகரில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஏற்கனவே மதுரை நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மேலும் சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்கியும், சகதிகளாக மாறியும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

    இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். மதுரையில் சாலைகளில் திடீர் திடீரென உருவாகியுள்ள புதிய பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெண்கள், குடும்பத்துடன் செல்வோர் அடிக்கடி சாலைகளில் பள்ளத்தில் விழுந்து சிக்குவதை காண முடிகிறது. மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சாலை வசதி சரியாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    சிறிது நேரம் கனமழை பெய்தாலே மதுரையின் மையப் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். மேல வெளி வீதி, விளக்குத்தூண், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி- ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீர் மறுநாள் காலை வரை வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டன. ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்றதால் தற்போது மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.

    தொடர்மழை காரணமாக குலமங்கம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, காளவாசல்-தேனி பிரதானசாலை, புதுராமநாதபுரம் ரோடு, மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    அந்த வழிகளில் செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடியே வாகனத்தில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சரியாக குப்பைகள் அள்ளப்படாததாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசியபடி இருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (62).சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    விருதுநகர் மேட்டுக்குண்டு சென்னல்குடியை சேர்ந்தவர் சேகர் (48). மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மனைவி மதுரைக்கு அழைத்து வந்தார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர். அப்போது சேகர் ஆவேசமாக கத்தியபடி தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    • உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

    • அ.தி.மு.க.வின் மிகப்பெரிய சங்கமமாக மதுரை மாநாடு அமையும் என்று வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறினார்.
    • அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னமும் கிடையாது.

    மதுரை

    மதுரை மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நாகமலை புதுக்கோட்டையில் எடப்பாடியார் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டி நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழாவை யொட்டி நடந்த இந்த

    ேபாட்டிக்கு மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் தலைமை தாங்கினார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

    இந்த போட்டியானது ஜூனியர் மற்றும் சீனியர் என 2 பிரிவில் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல உட்பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சிறப்பு பரிசுகளும், கோப்பைகளும், மெடல்களும் வழங்கப்பட்டன.

    இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில், இது இளைஞர்களுக்கான போட்டியாகவும், அவர்களது திறனை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், மாண வர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க. மாவட்ட கழகத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்து அதில் பங்கேற்கும் சிறந்த வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு மதுரை தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருக்கின்றனர் என்றார்.

    இதனைத் தொடர்ந்து மதுரை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பத்துறை மண்டல செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறியதாவது:-

    நாட்டு நடப்புகள் எவ்வாறு வெளிவர வேண்டும் என்பதற்கு சோசியல் மீடியா மூலதனமாக இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. நாளைய ஆட்சியை தீர்மானிப்பது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சோசியல் மீடியாவாகத்தான் இருக்கும். மதுரையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாடு ஆங்காங்கே சாதாரணமாக நடக்கிற பொதுக்கூட்டமாக இருக்காது. இது கூடி கலையும் நிகழ்வுமல்ல. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைகிற மிகப்பெரிய சங்கமமாக இருக்கும். தி.மு.க.வில் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னங்கள் தொடர்பு கொண்டு இயங்கி வருகிறது. அதனால் திரைத்துறையினர் தொடர்ந்து தி.மு.க.வினருக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.

    ஆனால் அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு பெரிய சினிமா தயாரிப்பு நிறுவ னமும் கிடையாது. அதனால் திரைத்துறையினர்

    அ.தி.மு.க.வினரை கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×