கட்டுமான பொருட்கள் திருட்டு

ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டுபோனது.போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கட்டுமான பொருட்கள் திருட்டு
Published on

திருமங்கலம்

திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது37). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக திருமங்கலம் நகர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை இந்த நிறுவ னத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக சாலை யோரங்களில் கம்பி, பிளாஸ்டிக் பைப்கள் வைக்கப்பட்டிருந்தன.

சம்பவத்தன்று திருமங்க லம் நகர் பகுதியில் சாலை யோரத்தில் வைக்கப்பட்டி ருந்த 1,500 மீட்டர் பிளாஸ்டிக் பைப்கள், 30 இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும். இதுகுறித்து கட்டுமான நிறுவன மேலாளர் சந்தோஷ் திருமங்கலம் நபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com