உடையில் தீப்பிடித்து டெய்லர் சாவு

உடையில் தீப்பிடித்து டெய்லர் பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடையில் தீப்பிடித்து டெய்லர் சாவு
Published on

மதுரை

அவனியாபுரம் ஆசீர்வாதம் நகரைசேர்ந்தவர் செல்வகுமார் (57).இவர் காமராஜர்சாலை முனிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே டெய்லர்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் சாமிகும்பிட்டு பூஜை நடத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மகன் ஹரிஸ் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

X

Maalai Malar
www.maalaimalar.com