தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் சாவு

தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் சாவு
Published on

மதுரை

விருதுநகர் மேட்டுக்குண்டு சென்னல்குடியை சேர்ந்தவர் சேகர் (48). மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மனைவி மதுரைக்கு அழைத்து வந்தார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர். அப்போது சேகர் ஆவேசமாக கத்தியபடி தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com