என் மலர்
மதுரை
- வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைதானார்.
- பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்தது தெரிய வந்தது.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம், ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தக்குமார் (வயது18). இவர் பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று பள்ளம் மீனாட்சி தியேட்டர் கிருதுமால் நதி பாலம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து ஆனந்தகுமார் உயிருக்கு போராடினார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. மர்ம நபர்கள் வெட்டி யதில் ஆனந்தகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த கொலை யில் தொடர்புடைய கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வில் மற்றொரு கும்பலுடன், ஆனந்த குமாருக்கு தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததும், அவரை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கீரைத்துறை மேலத்தோப்பு 3-வது தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் பேபி சரவணன் மற்றும் லட்சுமணன், பிரவீன், ராஜ்குமார், முத்துராம லிங்கம், பீடி ரமேஷ் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதில் வாலிபர் பேபி சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
- தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
- கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்வர்தீன்(வயது52). திருமணமான இவரது மகள் சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் வேதனையடைந்த அன்வர்தீன் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை சித்திரை திருவிழாவின்போது இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரி கலெக்டரிடம் திருமாறன் மனு அளித்தார்.
- சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
மதுரை
மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின் போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார்-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் பிரேம்குமார் (வயது 10) ஆற்றில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தான். அவனது குடும்பத்தினர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களுடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனும் உடன் வந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் 5 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் கடந்த 3-ந் தேதி வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்ேதன்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதை அலட்சியப் பப்படுத்தியதன் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மேலும் பிரேம்குமாரின் தந்தை, தாயை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தினேஷ், பிரேம் குமார் ஆகிய 2 மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் பிரேம்குமாரின் இறப்பு அந்த குடும்பத்துக்கு பெரிய இழப்பாக உள்ளது.
எனவே தமிழக அரசு இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
- அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது.
மதுரை
மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவர் இருசக்கர வாகனத்தில் ஹார்விபட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்மோதி வாலிபர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் வாலாந்தரவையை சேர்ந்தவர் ஆசாத் கோஸ் (வயது38). இவர் இருசக்கர வாகனத்தில் மேலூர் மெயின்ரோடு உத்தங்குடி சென்றார். அப்போது கூடலூர் கவர்னர் தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் ஓட்டி வந்த கார் ஆசாத் கோஸ் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி ஆசாத் கோசின் தாய் முனி யம்மாள் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது.
- வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.
மதுரை
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது73). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தனது 2-வது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அப்துல் காதர் ஜெய்லானி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீரேற்று நிலைய மோட்டார் அறையில் ஆபரேட்டர் இறந்தார்.
- திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
மதுரை
மதுரை ஆனையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் பிடரன் (வயது39). இவர் ஆனையூர் மெயின்ரோடு வாட்டர் டேங்க் நீரேற்றும் மோட்டார் அறை ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி முத்துப்பிள்ளை புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடரனின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
- கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.
மதுரை
கோடைகாலத்தை யொட்டி அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் மதுரையில் வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது.
சித்திரை திருவிழாவின் போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மழை பெய்வது நின்று விட்டதால் மீண்டும் வெயில் உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இந்த வெப்பத்தை தாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தாகத்தை தணிக்க தர்பூசணி மற்றும் பழ ஜூஸ், குளிர்பானங்கள் ஆகிய வற்றை குடிக்கின்றனர். இதனால் அவைகளின் விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் சாலை யோரங்களில் கோடை காலத்தையொட்டி விற்பனை செய்யப்படும் மோர், இளநீர், கரும்பு சாறு ஆகியவைகளை வாங்கி அருந்தி செல்கின்றனர்.
பஸ் மற்றும் ரெயில்களில் பகலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பலர் பகல் நேரங்களில் வீடுகளி லேயே முடங்கியுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.
இந்த கோடை வெயிலில் சாலை யோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் கருதுகின்றனர்.
மதுரையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பலர் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல்விழா நடந்தது.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மார்ச் 27-ல் 3 கம்ப கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று பூசாரி சண்முகவேல் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நகரத்தார்கள் தலைமையில் பால்குடமும், பொதுமக்கள் பூத்தட்டும் சுமந்து 4 ரத வீதிகளில் வலம் வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. இதில் நகரத்தார் நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணப்பன், வெங்கடாசலம், செயல் அலுவலர் சுதா, கணக்கர் முரளிதரன், காவல் ராசு அம்பலம் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வருகிற 22-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் வீதி உலா, 30-ந் தேதி பக்தர்களின் நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னிசட்டி திருவிழாவும் நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 31-ந் தேதி பூக்குழி விழாவும் நடக்கிறது. ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், 7-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். தக்கார் சங்கரேசுவரி, செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, பெருமாள், வசந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அக்கினி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
- குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.
மதுரை
அக்கினி நட்சத்திர காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது? என்ற குழப்பம் பலருக்கும் வந்து கொண்டே இருக்கும்.
அதற்கான பதிலை மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு. கருப்பையா கூறியுள்ளார். ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் வருவது அக்னி நட்சத்திரமாகும். இந்த மாதம் மே 4-ந் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திரம், வருகிற 29-ந் தேதி நிறைவடைகிறது.
இந்த காலகட்டத்தில் புதிய காரியங்கள் செய்ய லாமா?, சுப காரியங்கள் செய்யலாமா?, மொட்டை அடிக்கலாமா?, காதுகுத்து நடத்தலாமா?, புதிய வீட்டுக்கு குடி போகலாமா?, என்ற கேள்விகள் மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கும்.
பொதுவாக அக்கினி நட்சத்திர காலத்தில் முன் பாதியை தொடுப்பு என்றும், பின் பாதியை கழிவு என்றும் சொல்வார்கள். எனவே பின் பாதி காலத்தில் தாராளமாக சுப காரியங்கள் செய்யலாம். குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.
மேலும் வழக்கமான காரியங்களை சிறப்பாக செய்யலாம். புதிய காரியங்களை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. இந்த காலகட்டத்தில் தூரதேச பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. இடம், மனை தாராளமாக வாங்கலாம்.
இவ்வாறு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கமளித்துள்ளார்.
- குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவார ஓடைக்கரையில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. அதன் 48-வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. கார்த்திக் பட்டர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை செய்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
- அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார்.
- சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என ரோஜா கூறினார்.
மதுரை:
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி தரிசனம் செய்து விட்டு அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன். சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என்றார்.
அவரிடம் தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.
- பெரியார் பஸ் நிலையத்தில் கேனுடன் சுற்றிய மர்ம வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
மதுரை
தூங்கா நகரமான மதுரைக்கு 24 மணி நேரமும் வெளியூர், உள்ளூர் மக்கள் வந்து செல்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் வெளியூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதிகாலை 2.30 மணி அளவில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இரவு நேர பஸ்களில் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெரியார் பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் திருமங்கலம் செல்லும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆரப் பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய இடங்களுக்கு ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் திருமங்கலத்துக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
சித்திரை திருவிழாவை யொட்டி இரவு நேரத்தில் மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத் துக்கு பஸ்கள் இயக்கப்பட் டன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பயணி கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பெரியார் பஸ் நிலையத்தில் திருமங்க லம் பஸ் நிலையத்துக்கு காத்திருந்தால் ஒரு மணி நேத்திற்கு ஒரு பஸ்தான் வருகிறது. அதுவும் சில நாட்களில் செயல்படுவ தில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்த பயணிகள் திருமங்கலம் பஸ்சுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
அதிகாலை 3 மணிய ளவில் மேல்சட்டை அணி யாத வாலிபர் ஒருவர் ஒரு கேனை தோளில் வைத்தபடி பஸ் நிலையத்தை பலமுறை சுற்றி வந்தார். அந்த கேனில் ஏதோ ஒரு திரவம் இருந்தது. அது பெட்ரோலா? மண் எண்ணையா,? தண்ணீரா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் குடிபோதை யில் இருந்ததாக தெரிகிறது. அவரது உடலில் திரவம் சிந்தி இருந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்ட வரா? என்றும் சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் பெரியார் பஸ் நிலை யத்தில் போலீஸ் வாகனம் இருந்த போதிலும் போலீசாரை காணவில்லை. அவர்கள் வேறு பகுதிக்கு ரோந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே கேனுடன் சுற்றிய வாலிபர் தீக்குளிப்ப தற்காக இப்படி செல்கி றாரா? என்று பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனை கவனித்து நட வடிக்கை எடுக்க போலீசார் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். எனவே பெரியார் பஸ் நிலையத்தில் 24 மணி நேர மும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் தான் சமூக விரோதிகள் அங்கு வரு வதை தவிர்ப்பார்கள் என்று பயணிகள் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் திருமங்க லத்தில் பயணிகளை இறக்கி விட்டு ரிங் ரோடு வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்கின்றன.
திருமங்கலத்தில் நள்ளி ரவு நேரத்தில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து பெரி யார் மற்றும் ஆரப்பாளையம் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கைக்குழந்தை களுடன் பெண்கள் பஸ்சில் நின்றபடி பயணிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அதிக மான பஸ்களை இயக்க வேண்டும்.
இரவு நேரத்தில் திருப்ப ரங்குன்றம், திருமங்கலம் பஸ்கள் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் ஆரப்பாளையம் சென்று திருமங்கலம் பஸ்சை பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ள தால் கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.






