search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி
    X

    கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி

    • கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
    • கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    மதுரை

    கோடைகாலத்தை யொட்டி அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் மதுரையில் வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    சித்திரை திருவிழாவின் போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மழை பெய்வது நின்று விட்டதால் மீண்டும் வெயில் உச்சத்தை எட்டியுள்ளது.

    நேற்று மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இந்த வெப்பத்தை தாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தாகத்தை தணிக்க தர்பூசணி மற்றும் பழ ஜூஸ், குளிர்பானங்கள் ஆகிய வற்றை குடிக்கின்றனர். இதனால் அவைகளின் விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது.

    இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் சாலை யோரங்களில் கோடை காலத்தையொட்டி விற்பனை செய்யப்படும் மோர், இளநீர், கரும்பு சாறு ஆகியவைகளை வாங்கி அருந்தி செல்கின்றனர்.

    பஸ் மற்றும் ரெயில்களில் பகலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பலர் பகல் நேரங்களில் வீடுகளி லேயே முடங்கியுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.

    இந்த கோடை வெயிலில் சாலை யோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் கருதுகின்றனர்.

    மதுரையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பலர் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    Next Story
    ×