என் மலர்tooltip icon

    மதுரை

    • ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு நடந்தது.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும்

    மதுரை

    ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

    அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும் என்றும் எடுத்து கூறினர்.

    • மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
    • கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை

    முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.

    மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.

    பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.

    சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் 19-ந் தேதி ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார்துறை சார்பில் ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

    10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மதுரை புதூரில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் போட்டோவுடன் 19-ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்த வகையிலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் எழுதினார்.
    • வருகிற 2026-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

    அதில், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி முதற்கட்ட கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து 2023 ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கவும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவை யான ஏற்பாடுகளை செய்ய வும் கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுவிக் மாண்ட வியாவுக்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதான் மந்திரி சுவாஷ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜப்பான் நாட்டின் ஜிக்கா ஏஜென்சியுடன் கடனுதவிக் கான ஒப்பந்தம் செய்துள் ளது.

    இந்த ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் முழு மையாக கட்டி முடிக்கப் படும்.

    மேலும் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வசதியாக முதன்மை இயக்குனர், துணை இயக்குனர் (நிர்வாகம்) கண்காணிப்பு மற்றும் முதன்மை பொறி யாளர், நிர்வாக அதிகாரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு விரைவாக செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
    • சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.

    • கடந்த 2006-ம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு தமிழக அரசு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்கியது.
    • அரசாணைபடி நிலமற்ற பல ஏழை விவசாயிகளுக்கு அரசு திட்டத்தின்படி விவசாயம் செய்ய வழங்கபட்ட நிலத்தை பயனாளிகளிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம், திருமூலநகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லெவிஞ்சிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மாநில அரசு திட்டத்தின் மூலம் கடந்த 2006-ம் ஆண்டு நிலமற்ற ஏழைகளுக்கு தமிழக அரசு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்கியது.

    30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதித்து நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கு அரசு திட்டத்தின் படி விவசாய நிலம் ஒதுக்கப்பட்ட தேதியில் இருந்து 30 ஆண்டுகளுக்கு சொத்தை வேறு நபருக்கோ, வேறு பயன்பாட்டிற்கோ மாற்ற கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிலம் பெற்றவர்கள் 30 வருட காலத்திற்குள் சொத்தை வேறு நபருக்கு மாற்ற கூடாது என்ற நிபந்தனைகளை மீறி உள்ளனர்.

    விவசாயத்திற்காக அரசு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்கள் லே அவுட்களாக (வீட்டுமனை) மாற்றப்பட்டுள்ளன. இது போன்ற செயலால் எதிர்காலத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு நிலம் கிடைக்காது.

    எனவே அரசாணைபடி, நிலமற்ற பல ஏழை விவசாயிகளுக்கு அரசு திட்டத்தின்படி விவசாயம் செய்ய வழங்கபட்ட நிலத்தை பயனாளிகளிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். உண்மையான பயனாளிகளை கண்டறிந்து நிலங்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து சென்னை வருவாய் நிர்வாக அதிகாரி, நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    • மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். 

    • அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் தள்ளுவண்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகருடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளுவண்டி உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், செயல் அலுவலர் கருணாகரன், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வாளர் கர்ணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வந்திருந்தனர்.

    மதுரை முத்துப்பட்டி பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்ப தாகவும், அவற்றை அகற்ற கோரியும் வீரமுடையான், கீழமுத்துப்பட்டி பொதுமக்கள் நலசங்கம் சார்பில் கண்ணன், கர்ணன், கணேசன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாநக ராட்சி பகுதியில் இருந்து அதிகமான குப்பை லாரிகள் முத்துப்பட்டி வழியாக செல்கிறது. பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கலெக்டர் இந்த கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல் பெருங்குடி பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து விட்டதாகவும், அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரளானோர் மனு கொடுத்தனர். வழக்கமாக காலை 10 மணி அளவில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு அளிப்பார்கள்.

    இன்று காலை 11 மணி வரையும் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரி கள் வராததால் பொது மக்கள் மனு கொடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவை அரசே நடத்த வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தினார்.
    • அதை யார் நடத்துவது என்பது தான் முக்கியமானது.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது-

    முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, வைகாசி விசாகம் என தொடர்ந்து பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்

    அதுபோல் மலைக் கோவில் போகர் சன்னதி ஜீவ சமாதியில் உள்ள சித்தர் போகரின் ஜெயந்தி விழாவும் நடைபெறுவது வழக்கம். போகர் 18 சித்தர்க ளில் மிக முக்கியமான சித்தராவார். போகரின் ஜீவ சமாதி சன்னதி மலைக் கோவில் அருகே அமைந்துள் ளது. ஆண்டுதோறும் மே 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.இந்து சமய அறநிலை யத்துறையின் கட்டுப்பாட் டில் உள்ள போகர் ஜீவ சமாதியில் போகர் ஜெயந்தி விழா நடத்தப்போவதாக சில தனியார் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. போகர் ஜெயந்தி விழாவை நடத்த லாம். அதை யார் நடத்துவது என்பது தான் முக்கிய மானது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போகர் ஜீவ சமாதி யில் அரசின் அறநிலையத் துறை சார்பில் போகர் ஜெயந்தி விழாவை நடத்து வதே சரியானதாகும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைதானார்.
    • பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம், ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தக்குமார் (வயது18). இவர் பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று பள்ளம் மீனாட்சி தியேட்டர் கிருதுமால் நதி பாலம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து ஆனந்தகுமார் உயிருக்கு போராடினார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. மர்ம நபர்கள் வெட்டி யதில் ஆனந்தகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த கொலை யில் தொடர்புடைய கொலையாளிகளை தேடி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வில் மற்றொரு கும்பலுடன், ஆனந்த குமாருக்கு தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததும், அவரை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கீரைத்துறை மேலத்தோப்பு 3-வது தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் பேபி சரவணன் மற்றும் லட்சுமணன், பிரவீன், ராஜ்குமார், முத்துராம லிங்கம், பீடி ரமேஷ் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதில் வாலிபர் பேபி சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×