என் மலர்tooltip icon

    மதுரை

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக வைகாசி விசாக திருவிழா உள்ளது.ஆண்டுதோறும் வைகாசி மாசம் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா வருகின்ற 24-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு கோவில் ஓதுவார் பாடல் பாடப் பெற்று சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகம் ஜூன் 2-ந் தேதி நடைபெறும். இதற்காக சண்முக சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி, தெய்வா னையுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    அங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் கொண்டு சுவாமி களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து பாலா பிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.

    இதில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கிருந்து இரவு பூ பல்லக்கில் திருப்ப ரங்குன்றம் கோவிலை வந்து அடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்நாடு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், மகுடம் சக்தி, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையம் டிராய் அமைப்பு என்.டி.ஓ.3 பரிந்துரையின் பேரில் கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு கேபிள் டி.வி.கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்களும், கேபிள் டி.வி.ஆபரேட்டர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு என்.டி.ஓ.3 பரிந்துரையை நிறுத்திவைத்து கேபிள் டி.வி.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், எதிர்காலத்தில் இந்திய தொலைதொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி நலவாரியம் அறிவித்திட வேண்டும், அரசு கேபிள் அனலாக் நிலுவை தட வாடகை குறித்து கூட்ட மைப்பு தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது 3 கத்திகள், கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோலைய ழகுபுரம் பகவதி அம்மன் கோவில் 3-வது தெரு சேகர் மகன் உமையாகுமார் என்ற பெரிய எலி (23), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு பாண்டியன் குறுக்கு தெரு பாண்டி மகன் அருண் பாண்டி (23), சோலை யழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி நகர் 4-வது தெரு மீனாட்சி சுந்தரம் மகன் சின்ன எலி (21), சோலைஅழகுபுரம் அன்வர் உசேன் மகன் அஜிஸ் (21), சோலையழகுபுரம் 3-வது தெரு ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்ற சிவா (22) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

    • ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து ெகாண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்குவதுபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு திட்டத்தில் அரசு முன்னுரிமை அளிக்க ேவண்டும். எப்.சி. கட்டணம், சாலைவரியை குறைக்க வேண்டும்.

    ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம கும்பல் நகை-பணத்தை பறித்து சென்றது.
    • வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது50). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் மறித்து அவரை தாக்கினர். தொடர்ந்து அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறி வைத்து நகை-பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வரும் கொள்ளையர்கள் பட்டப்பகலில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

    எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வழிப்பறி கொள்ளை யர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம் நடந்தது.
    • திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்தி களுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பூஜை, தீபாராதனை முடிந்ததும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வருவார்கள்.

    ஜூன் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை திருஞான சம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5-ந் தேதி காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடும் நடக்கிறது.

    அன்றிரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருவார். மே 24-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடப்பதால் உபய தங்கரதம், உபய திருக் கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான திருமறைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்க வாசகர் பிறந்தார். இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31-ந் தேதி காலை 11.15 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி பயணி பலியானார்.
    • தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் உள்ள 8-வது பிளாட்பாரம் அருகே 42 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்ேபாது அந்த வழியாக வந்த தனியார் பஸ் கவனக்குறைவாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தர். உடனே அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் பஸ் மோதி இறந்தவர் டேனியல் ஜேசுதாஸ்(47) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் பேரையூரை சேர்ந்த சேக் முகமது என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

    பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் மத்திய மந்திரி பங்கேற்றார்.
    • ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசுத்துறை மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டன.

    மதுரையில் இது தொடர்பான தொழில் வர்த்தக சங்கத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். மதுரை தபால் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.ஜெயசங்கர், மதுரை மண்டல ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தபால் துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் 200 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றுத் தட்டச்சர், தண்டவள பராமரி ப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

    • ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு நடந்தது.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும்

    மதுரை

    ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.

    அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும் என்றும் எடுத்து கூறினர்.

    ×