search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skills Training"

    • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

    பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம்.
    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம், அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக் கல்லூரிவளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.

    இதன்படி பல்லடம் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் போஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட தொழில் மையம், உள்ளிட்டவைகளின் சார்பில், தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுகலை, ஓட்டுனர், கணினிப் பயிற்சி, துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மற்றும்சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12 ந் தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரும் 12 -ந்தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 0421 2999152, 94990 55955 என்கிற எண்களில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யவேண்டும்.

    வரும் 11-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    பெண்களுக்காக வரும் 12-ந் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சியில், 10-ம்வகுப்பு, பிளஸ்2 மற்றும் கல்லூரி படிப்பிற்குப்பின் என்ன படிக்கலாம்,அ ரசு வழங்கும் கல்விக்கான ஊக்கத்தொகை விவரங்கள், சுய தொழில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×