search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudden infant death"

    • மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
    • நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை திடீரென இறந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது30). இவரது மனைவி ராணி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2-வது குழந்தை பிறந்து இறந்துவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் 3-வதாக குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உடல் நலக்குறைவுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் ராணி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×