சேலம் அன்னதானப்பட்டியில் 1½ மாத குழந்தை திடீர் சாவு

மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம் அன்னதானப்பட்டியில் 1½ மாத குழந்தை திடீர் சாவு
Published on

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவிக்கு கடந்த 1½ மாதத்திற்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு வயிற்றுப்போக்குடன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com