3 மாத பெண் குழந்தை திடீர் சாவு

ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
3 மாத பெண் குழந்தை திடீர் சாவு
Published on

சேலம்:

சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள ஹபீப் தெருவை சேர்ந்தவர் ஜக்கிரியா. இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு கடந்த ஒரு மாதமாக தோல் அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com