என் மலர்tooltip icon

    மதுரை

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பூப்பல்லக்கு பவனி நாளை நடக்கிறது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேரகன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஏராள மான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பூக்குழி இறங்கி னர். விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இன்று மாலை பட்டு பல்லக்கில முருகன் எழுந்த ருளி கோவில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்து கள்ளர் திருக்கண் வந்து அடைவார்.

    நாளை அங்கிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் முருகன் பூப்பல்லக்கில் எழுந்தருளு கிறார். தொடர்ந்து வீதி உலா வந்து நள்ளிரவு 12 மணிக்கு ேகாவிலை வந்தடைகிறார்.

    • தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகருக்குள் வந்து செல்லும் தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவிலான ஹாரன்களை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் மேலூர் மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் ஆகியோர் மேலூர் பஸ் நிலையம் முன்பாக சுமார் 10 தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த கூம்பு வடிவ ஹாரன்களை அப்புறபடுத்தினர்.

    மேலும் நகருக்குள் அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்ககூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க அனுமதிக்ககூடாது, போக்கு வரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பனவற்றை பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரி டம் எடுத்து கூறினர்.

    இருந்தபோதிலும் மேலூர் நகர பகுதிக்குள் காலையில் இருந்து இரவு வரை குடிநீர் வினியோகம் செய்ய வரும் மினி லாரிகள், தெருக்களுக்குள் வரும்போது அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை ஒரே இடத்தில் நின்று கொண்டு தொடர்ந்து அடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

    அதுபோன்ற வாகனங்களையும் சோதனை செய்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹா ரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    • போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் மற்றும் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 மாதத்திற்கும் மேலாகி வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரையில் இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை ரெயில் நிலையம் முன்பு பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

    உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டகாரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாதர் சங்க நிர்வாகி பொன்னுத் தாய், சசிகலா, இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கருப்புசாமி, மாணவர் சங்க செயலாளர் பாலா உள்பட 150 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
    • இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அழகர் மலையில் உள்ள முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் நல்லதம்பி, மேலூர் ஆய்வா ளர் அய்யம்பெருமாள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

    இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதியவர் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முத்துக்கூறு நாகராஜ்(வயது60) என்பவர் தனது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது நாகராஜ் கோவிலுக்குள் செல்லாமல் வடக்கு சித்திரை வீதியில் உள்ள காலணிகள் பாதுகாப்பு அறை அருகில் காத்திருப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமி கும்பிட சென்ற உறவினர்கள் திரும்பி வந்து பார்த்தபோது நாகராஜ் மாயமாகி இருந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரை கைது செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

    • மேகதாது அணை பிரச்சினையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காவிரி நீர் பிரச்சினை என்பது உயிர் பிரச்சினை யாகும். 20 மாவட்டத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதார மாக விளங்கி வருகிறது. டெல்டா விவசாயிகளின் நெற்களஞ்சியத்துக்கு காவிரி உயிர் ஆதாரமாகவும் உள்ளது.

    காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகளை ெஜயலலிதாவும், எடப்பாடி யாரும் முதலமைச்சராக இருந்த போது தடுத்து நிறுத்தினார்கள். குறிப்பாக 19.2.2013 அன்று மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் ெஜயலலிதா வெளி யிட்டார்கள். இதனை தொடர்ந்து காவிரி தாய் என்று டெல்டா மக்கள் புகழாரம் சூட்டினார்.

    அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதல்-அமைச்சராக இருந்தபோது ெஜயலலிதா வழியில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி 16.12.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குழுவை அமைக்க வர லாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். தற்போது கர்நாடக சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி உள்ளது. இதற்காக ரூ.9 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தெரிந்தும் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க ஆயத்தமாகி விட்டாரா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவகுமார் அணை கட்டுவோம் என்று கூறியிருப்பது தமிழக மக்களிடத்தில் கவலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்- அமைச்சர் வாய் திறக்க வில்லை. அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை கடுமையான கண்டனமாக இல்லை. இதன் மூலம் ஜீவதார உரிமையில் அரசு கவனம் செலுத்தவில்லையோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து தொடர் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க.-கூட்டணி கட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று செல்லூர் ராஜூ
    • வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பாதயாத்தி ரையாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி கவுன்சிலர் கருப்பசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியதாவது:-

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு 7 வகையான அன்னதானம் வழங்கப்ப டுகிறது. அனைத்து மதத்தி னருடைய விழாக்களிலும் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம் வழங்கப்படும். ஜாதி சமய வேறுபாடு இன்றி அ.தி.மு.க. இருந்து வருகிறது

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சி கண்டனத்திற்குரியது. கர்நாடக துணை முதல்வர் வாய் கொழுப்போடு பேசி வருகிறார். அணை கட்டுவது குறித்து டி.கே.சிவக்குமார் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழக மக்களுக்கு தி.மு.க. அரசு மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் இழைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளும் உடந்தையாக உள்ளன.

    தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் என்னவென்று தெரியாமலே வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். ரூ.8 ஆயிரம் கோடி முதலீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள்.ஆனால் உண்மை நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும். பெருமளவிலான முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை.

    கடந்த ஆட்சி காலத்தில் எங்களது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சென்று பல்லாயிரம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். வெளிநாடு பயணம் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டார். தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெத்து பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டார்.
    • கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த ார். அப்போது அவருடன் சென்ற பேத்தியை காண வில்லை.

    தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்ம நபர் வளை யலை திருடி சென்றுள்ளார்.

    இதுகுறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜவுளி கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதனடிப்படையில் அந்த முதியவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மதுரை தாசில்தார் நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    அதில், அவர் வேறு சில ஜவுளிக்கடைகளிலும் குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63). இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தா வணியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார்.அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் செயின் காணாமல் போனது.

    இதுகுறித்து துரைசாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையிடம் திருடினார்களா? அல்லது மாயமானதா? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது.
    • 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது கூடலழகர் பெருமாள் கோவில். இது வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதற்காக கூடலழகர் பெருமாள் கோவில் எதிரே பாண்டிய வேளாளர் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை அலங்கரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் திருவிழாவில் 5-ந் தேதி தசாவதாரம் நிகழ்ச்சி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்க னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நந்தி, பலிபீடத்திற்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, கோழிப்பட்டி கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கண்னையா. இவரது மனைவி சக்கம்மாள்(58) அதிகாலை வீட்டு வாசல் தெளிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சக்கம்மாள் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×