என் மலர்
மதுரை
- மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
- காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி 5-வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நகர்புற நலவாழ்வு மையத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருக்குமார், திருமங்கலம் நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் டாக்டர் அருண்பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் வீரக்குமார்,சின்னசாமி, ஜஸ்டின்திரவியம், பெல்ட்முருகன், வினோத், சரண்யாரவி, மச்சவள்ளி,ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், முத்துகாமாட்சி, மங்களகவுரி, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா, செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் முத்து, சுகாதார அலுவலர் சண்முகவேலு ஓவர்சீஸ் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சுகாதாரமையம் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.
- திருமங்கலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே யுள்ள சாத்தங்குடி யை சேர்ந்தவர் ராஜாராம் (வயது30). கோவையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பேச்சி யம்மாள்(24). இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜாராம் கோவையில் வேலை பார்ப்பதால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் அவர் ஊருக்கு வந்தபோது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பேச்சியம்மாள் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.
- புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது38). இவரது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
திருமங்கலம் நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவசேகர் (57) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சிவசேகரை கைது செய்தனர்.
- இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
- இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் என்ற மலைச்சாமி(வயது55), கூலித்தொழிலாளி. இவர் வெளியூர் சென்றுவிட்டு டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கு நடந்து சென்றபோது, பேரையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலைச்சாமியின் மனைவி லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை எந்த ஒரு பொதுக்காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தி.மு.க. அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிடுகின்றது.
கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கோர்ட்டு உத்தரவை மீறி விற்பனை செய்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை முடிந்த பின்புதான் உண்மை தெரியவரும். ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
- அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மதுரை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.
ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.
சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.
யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.
- வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலியானார்.
- 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி ரிங்ரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெ க்டர் ஞானபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் சிவப்பு வண்ண சேலை அணிந்திருந்தார். இடது பக்க கன்னத்தில் கருப்பு மச்சமும் வலது முழங்காலில் காயத்தளும் இருந்தது. மதுரை காமராஜர் சாலையில் தனியார் வங்கி அருகே வாகனம் மோதி 72 வயது மதிக்கத்தக்க முதியவர் கணுக்காலில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குப்புசாமி என்பது மட்டும் தெரிய வந்தது. அவரது வலது கால் தொடையில் ஒரு கருப்பு மச்சமும், வலது பக்க விலாவில் கருப்பு மச்சமும் இருந்தது. இவர்களை பற்றி தகவல் தெரிய வந்தால் 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை
தமிழில் பெயர் பலகை வைக்காத கடை, நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டி ருந்தார்.
அதன்படி சிறப்பாய்வு மேற்கொள்ள மதுரை பெருமண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் வழிகாட்டுதல் வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்திற் குட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சிறப் பாய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் மொத்தம் 275 கடைகள், நிறுவனங்கள் உணவு நிறுவ னங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு தமிழில் பெயர் பலகை வைக்காத 127 கடை, நிறுவனங்கள் உரிமை யாளர்கள் மீதும் மற்றும் 6 உணவு நிறுவன உரிமையா ளர்கள் மீதும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு கடைகள் மற்றும் மற்றும் நிறுவனங்கள் விதிகள். 1948-ல் விதி 15-ன்படியும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகள் 1959-ல் விதி 42-பி-ன் படியும் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும் ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழுக்கு கீழே வருமாறும் இருக்க வேண்டும்.
மற்ற மொழி எழுத்துக் களை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியும்படி பெரிய எழுத்தில் வருமாறும் தமிழ் சீர்திருத்த எழுத்துக்களில் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றாத கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையா ளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் தொடர்ந்து பெயர் பலகையினை மாற்றாவிடில் 2-வது முறை முரண்பாடு கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேற்படி தமிழ் பெயர் பலகை குறித்து கடை நிறுவன உணவு நிறுவன வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேலும் தற்போது நடந்த ஆய்வில் 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ஏ-ன் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராதது தொடர்பாக ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டதில் 44 கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடை நிறுவ னங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் குறித்து மதுரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் மதுரை. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (0452 - 2604388).
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04562 - 252130). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04575 - 240521).
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் ராமநாதபுரம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04567 - 221833) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
இந்த தகவலை மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
- ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.
மதுரை
கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் புரனமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேவ பிரசன்னம் மற்றும் அதற்கான சாஸ்தாபரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆரியங்காவு கோவிலில் நடந்தது. இதில் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உண்ணிகிருஷ்ணன், சப் குரூப் ஆபிசர் விஜேஷ், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்க மூத்த தலைவர் ராகவன், ரவிச்சந்திரன், கணேஷ், விஜி குமார், சுரேஷ் கண்ணா ஆகியோரும் ஆரியங்காவு கோவில் அட்வைசரி கமிட்டி தலைவர் ராதா கிருஷ்ணன் பிள்ளை, காரிய தரிசி சுஜாதன் மற்றும் உறுப்பினர்கள், ஆரியங்காவு ஊர் முக்கியஸ்தர்கள், புளியரை, செங்கோட்டை, தென்காசி பிரமுகர்கள், மற்றும் ஆரியங்காவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், ஆரியங்காவு கோவில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகளை மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான கடிதத்தை திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.
- காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் அருகேயுள்ள ஆத்திகுளம் கனகவேல் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹரீஸ்ராஜ் (வயது21). இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக ஹரீஸ்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரீஸ்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சகோதரி ரோகிணி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருதுபாண்டியர்கள் அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வந்தார்.
- ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்தை நிறுவியவர் திருஞான சம்பந்தர். இவரது குருபூஜை விழா வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டா டப்படும்.
அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீனத்திற்கு காணிக்கை யாக அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெள்ளி தேர் கோ ரதம் என அழைக்கப்படுகிறது.
இந்த தேர் முன்பு 2 மாடுகள் பூட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் தேரில் திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாயில் மண்டபத்தில் இருந்து கீழ ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனம் மடம் தெற்கு நுழைவுவாயிலை அடைந்தது. தொடர்ந்து மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், சேர்வைக்கார மண்டகப்படி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






