இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலியானார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

திருமங்கலம்

விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன் என்ற மலைச்சாமி(வயது55), கூலித்தொழிலாளி. இவர் வெளியூர் சென்றுவிட்டு டி.கல்லுப்பட்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கு நடந்து சென்றபோது, பேரையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலைச்சாமியின் மனைவி லீலாவதி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com