ஆரியங்காவு தர்மசாஸ்தா பணிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தலைவராக தேர்வு

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.
ஆரியங்காவு தர்மசாஸ்தா பணிகளுக்கு  முன்னாள் எம்.எல்.ஏ. தலைவராக தேர்வு
Published on

மதுரை

கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் புரனமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேவ பிரசன்னம் மற்றும் அதற்கான சாஸ்தாபரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆரியங்காவு கோவிலில் நடந்தது. இதில் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உண்ணிகிருஷ்ணன், சப் குரூப் ஆபிசர் விஜேஷ், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்க மூத்த தலைவர் ராகவன், ரவிச்சந்திரன், கணேஷ், விஜி குமார், சுரேஷ் கண்ணா ஆகியோரும் ஆரியங்காவு கோவில் அட்வைசரி கமிட்டி தலைவர் ராதா கிருஷ்ணன் பிள்ளை, காரிய தரிசி சுஜாதன் மற்றும் உறுப்பினர்கள், ஆரியங்காவு ஊர் முக்கியஸ்தர்கள், புளியரை, செங்கோட்டை, தென்காசி பிரமுகர்கள், மற்றும் ஆரியங்காவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில், ஆரியங்காவு கோவில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகளை மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான கடிதத்தை திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com