என் மலர்tooltip icon

    மதுரை

    • அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.

    அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.

    அவருக்கு வழியெங்கும் மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • மதுரை மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
    • பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறை வாசிகளின் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதா ரத்திற்காக பல்வேறு வகை யான தொழில் பயிற்சிகள் சிறைக்குள் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலை யத்தை பிரீடம் பில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் தொடங்கி சிறைவாசி களுக்கு வேலை வாயப்பை அளித்து வருகிறது.

    முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர் பாளையங் ேகாட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 5 இடங்களில் தொடங்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் புதிய பெட்ரோல் பல்க் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தி னராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன், இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்து அவர்களுக்கு களப்பயிற்சி யும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கியது.

    • அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது.

    மதுரை

    அ.தி.மு.க மாநாட்டு வளாகத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெறும் அதி.மு.க மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களும் பொது மக்களும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலையில் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    இந்த மாநாடு இதுவரை யில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. நடத்தும் இந்த மாநாட்டை கண்டு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருப்பது மலை யோடு மோதுவது போன்றதாகும்.

    நீட் தேர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிய தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது. அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    குறிப்பாக பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்தில் காயமடைந்த சிகிச்சை பெற்று வரும் தி.மு.க.வினருக்கு தளபதி எம்.எல்.ஏ. நிதி உதவி செய்தார்.
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.

    மதுரை

    ராமநாதபுத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று 18-ந்தேதி மீனவர்கள் நல மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதுரை திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

    84-வது வார்டு வில்லா புரத்தை சேர்ந்த தங்க பாண்டியன் மனைவி விஜயலெட்சுமி(வயது48), அன்பழகன் மகன் அன்புராஜ் (32) பாலசுப்பிர மணியன் மகன் பால முருகன், செய்யது உசேன் மனைவி சாஜித்(52), மாரி (38), வேல்மணி (43) உள்பட 9 போ் படுகாயமடைந்தனா்.

    காயமடைந்தவா்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனா். இந்த விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவ மனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களை மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செய லாளர் தளபதி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிதியுதவி வழங்கிய அவர் மருத்துவ உதவிகளுக்கு தன்னை அணுகுமாறும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்பி னாலும் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்களிடம் கூறினார்.

    அப்போது பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் போஸ் முத்தையா, கிருஷ்ணா பாண்டி, வட்டச் செயலாளர் பாலா என்ற பாலசுப்ரமணியன், மூவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற

    22-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 2 (வடக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் மக்கள் இயக்க பிரமுகர் திருமணம் 21-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்‌.

    மதுரை

    மதுரையில் விஜய் மக்கள் இயக்க தெற்கு புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார்-பூமாப்பிரியா திருமணம் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப் பாளர், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்..தங்கபாண்டி தலைமையில் ஜீவா நகர் பகுதியில் உள்ள மெஜஸ்டிக் மஹாலில் நடைபெறும் திருமணத்தை மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை இணை இயக்குனர் பாஸ்கரன், வழக்கறிஞர் கோகுல் தி.மு.க. 7-வது வார்டு நகர் மன்ற தலைவர், விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர், ஆர் சீனிவாசன் உயர்நீதி மன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர், பி.என். வெங்க டேஸ்வரன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அதிமுக பகுதி துணைச் செயலாளர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள், மதுரை ஆன்லைன் விஜய் பேன்ஸ், தொகுதி ,பகுதி, நகரம், ஒன்றியம் பேரூராட்சி அளவிலான மக்கள் இயக்க நிர்வாகிகள்,நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து கிறார்கள்.

    • எழுச்சி மாநாடு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பமாக திரண்டு வர வேண்டும்.
    • செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கழகத்தின் பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியாரின் தலை மையில் கழகத்தின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரை வளையங் குளம் பகுதியில் நாளை காலை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கழக கண்மணிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கடைகோடி தொண்டர்கள் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் பங்கேற்கிறார்கள்.

    இந்த எழுச்சிமிகு மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் மாநாட்டின் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்து மாநாட்டின் இறுதி வரை பங்கேற்கும் வகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டுக்கோப்போடு எடப்பாடியாரின் ஆணை யை நிறைவேற்றும் சிப்பாய் களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராணுவ சிப்பாய்களாக பங்கேற்போம் என ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர்

    ஆர். பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது-

    கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் மதுரை மாநகரில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வெகு விமரிசையாக நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் தலைமை தாங்கி மாநாட்டை தொ டங்கி வைத்து மாநாட்டில் வீர உரையாற்றுகிறார்.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர், நகரம் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி கூட்டுறவு பிரதிநிதிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடியாரின் தரத்தை வலுப்படுத்திட அன்புடன் வேண்டுகிறேன். மாநாட்டில் கழகத் தொண்டர்களும் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளும் ராணுவ கட்டுப் பாடுடன் ராணுவ சிப்பாய்களாக பணியாற்றி சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த அணி திரள்வோம் என ராஜன்செல்லப்பா அறிக்கையில் கூறினார்.
    • எடப்பாடியாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும்

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், அ.தி.மு.க .மண்டல செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியுடன் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியாரின் சீரிய தலைமையில் மதுரை யில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக் கிழமை) மிக பிரம்மாண்ட மாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் சங்கமிக்கிறார்கள். இந்த வெற்றி சரித்திரம் படை க்கும் மகத்தான மாநாட்டில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    வீர வரலாற்றின் எழுச்சிமிக்க மாநாட்டில் அனைவரும் பங்கேற்று எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்திட ஒன்றிணைவோம். நாளைய தமிழகத்தின் நிரந்தர முதல் வராக எடப்பாடி யாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அணி அணியாக திரண்டு வந்து ஆர்ப்பரிப்போம், களம் வெல்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பணிச்சுமையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள திருப்புவனத்தை அடுத்துள்ள அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ராஜ் பிரபாகரன் (வயது 26). இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணி யாற்றி வந்தார். இதற்காக அங்குள்ள காவலர் குடியிருப்பில் ராஜ் பிரபாகரன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக இவர் விரக்தியில் இருந்த தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று காலை வீட்டில் ராஜ் பிரபாகரன் தூக்குப் போட்டுக் கொண்டார்.

    இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜ் பிரபாகரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ்காரர் தற்கொலை செய்தது தொடர் பாக வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் போலீ சார், ராஜ் பிரபாகரன் குடும்ப பிரச்சினை காரண மாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக திருக்குறள் ஒப்பு விக்கும் மாணவ-மாணவி களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படு கிறது.

    உலக பொதுமறையான திருக்குறள் 1330 குறட்பாக்க ளையும் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கும் போட்டியில் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அம்மா மக்கள்குறை தீர்க்கும் வழிகாட்டு மையம் தனது கல்வி தொண்டில் இலவச நோட்டு புத்தகம், ஆக்கி மட்டை, அரசு பொது தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவி களுக்கு ரொக்க பணம் ரூ.10 ஆயிரம், 7ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு சிகரம் பதிக்கும் விதமாக மாணவ-மாணவி களுக்கு 2500 இலவச திருக்குறள் வழங்கிட முன்வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக வழிகாட்டு மைய அறங்காவலர் டாக்டர் அசோக்குமார் பிறந்த நாள்விழாவை யொட்டி வாடிப்பட்டி அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 979 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப் பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திலக வதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் முன்னான் கவுன்சிலர் அருணாதேவி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பிரேமா வரவேற்றார். கவுன்சிலர் சூரியா அசோக் குமார் மாணவிகளுக்கு இலவச திருக்குறள்புத்தகம் வழங்கினார்.

    இதில் 2-ம் கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கும், பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கும், மேட்டு நீரேத்தான் உயர் நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகமும், ஆங்கில அகராதி யும் வழங்கப்பட உள்ளது என்று அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டுமைய நிறுவனர் முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    • சதுரகிரி மலையில் கழிவுகளை அகற்றுவதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
    • மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவீகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. பஞ்ச பூத லிங்க தலமாக போற்றப்படும் இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    சுந்தர மகாலிங்கம், இரட்டை லிங்கம் ஆகியவை சுயம்புலிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக தெய்வீ கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லிக்கின்றனர்.

    18 சித்தர்களும் சதுரகிரி யில் வந்து வழிபாடு நடத்துவதாக நம்பிக்கையாக உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ண மியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு 12-ந்தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு 15, 16, 17-ந்தேதிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் அடி வாரத்தில் இருந்து அனு மதிக்கப்பட்டனர்.

    பக்தர்களின் உடைமை களை சோதனை செய்த துடன், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட் கள், பிளாஸ்டிக் பாட்டில் கள் உள்ளிட்ட வற்றை கொண்டு செல்லக்கூடாது என கண்டிப்புடன் தெரி விக்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சென்றதால் மலை பாதைகள் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சேர்ந்தது. அது மட்டுமின்றி தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டதால் அதனால் சேர்ந்த கழிவு களும் சதுரகிரி மலையில் குவிந்தன.

    17-ந்தேதி வரையுடன் அனுமதி முடிந்த நிலையில் மறுநாள் 18-ந்தேதியில் இருந்து வனப்பகுதியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மூடை மூடையாக சேர்க்கப்பட்ட குப்பைகளை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இன்னும் மலைப்பகுதியில் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கிறது. அதனை அகற்று வதில் வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

    சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைப்பாதை பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சதுரகிரியில் கழிவுகளை முழுவதுமாக அகற்ற ஒரு வாரம் காலம் ஆகும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×