அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும்

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார். தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும்
Published on

மதுரை

அ.தி.மு.க மாநாட்டு வளாகத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் நடைபெறும் அதி.மு.க மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களும் பொது மக்களும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலையில் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாடு இதுவரை யில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. நடத்தும் இந்த மாநாட்டை கண்டு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருப்பது மலை யோடு மோதுவது போன்றதாகும்.

நீட் தேர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிய தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது. அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.

குறிப்பாக பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com