என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
- மதுரையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பணிச்சுமையா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள திருப்புவனத்தை அடுத்துள்ள அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ராஜ் பிரபாகரன் (வயது 26). இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணி யாற்றி வந்தார். இதற்காக அங்குள்ள காவலர் குடியிருப்பில் ராஜ் பிரபாகரன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் விரக்தியில் இருந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று காலை வீட்டில் ராஜ் பிரபாகரன் தூக்குப் போட்டுக் கொண்டார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜ் பிரபாகரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரர் தற்கொலை செய்தது தொடர் பாக வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் போலீ சார், ராஜ் பிரபாகரன் குடும்ப பிரச்சினை காரண மாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






