என் மலர்tooltip icon

    மதுரை

    • சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்புகள் ஆகிய பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் கண்டறியப்பட்ட தோடு, அவர்கள் திருடி வைத்திருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறி வதற்கும் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு பெற்று தருவதற்கும், உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கவுரவிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முடிவு செய்தார். அதன்படி பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட 50 பேரை நேரில் வரவழைத்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தாமாக முன்வந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூகநோக்கில் சி.சி.டி.வி. காமிராக்களை நிறுவ வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.

    • காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு இத்தாலிய யோகா குழுவினர் வருகை தந்தனர்.
    • பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    மதுரை

    இந்தியாவில் பின்பற்றப்படும் யோகா, தியானம், நல வாழ்வு ஆகியவற்றை கற்றுக் கொண்டு இத்தாலிய மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கான பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    இந்த குழுவினர்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தனர். காந்திய சிந்தனைகள் குறித்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். காந்தி நினைவு அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட யோகா குழுவினர் அந்த அருங்காட்சியகத்திற்கும் இத்தாலி நாட்டிற்குமான தொடர்புகள் வருங்காலத்தி லும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த னர்.

    இதற்காக காந்திய கலாசார பரிமாற்றம் தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • பாவாணர் மணிமண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக பொருத்த வேண்டும்.
    • தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து மறைந்து இன்றும் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழிவித் தகர் போன்று போன்ற பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் தமிழ்தேசியத்தந்தை "மொழி ஞாயிறு" தேவநயப் பாவாணர்.

    அவரை பெருமைப்ப டுத்தும் விதமாக திருவுரு வச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் மதுரை சாத்த மங்கலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி மணிமண்ட பத்தை திறந்து வைத்து, பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம் என்பவருக்கு மணிமண்டப பொருப்பாளராக அரசு பணி நியமன ஆணை வழங்கினார். பரிபூரணம் உயிருடன் இருக்கும் வரை மணிமண்டபத்தை சிறப்பாக பராமரித்து அங்கு வரும் தமிழ் ஆர்வ லர்களுக்கு தனது தாத்தா தேவநேயப்பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறி வந்தார்.இந்த நிலையில் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் பணிக்காலம் முடிவடையும் முன்னரே பரிபூரணம் உயிரி ழந்தார். இந்த நிலையில் மணிமண் டபத்திற்கு வரும் தமிழ் ஆர்வலர்கள் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்க நிலையான பொறுப்பாளர் நியமிக் கப்படாமல் உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் பாவா ணரின் வரலாற்றை தெரிந்து கொள்ளமுடியால் சென்று விடுகின்றனர். மேலும் மணிமண்டபத்தை பார்வையிட வரும் ஆண்-பெண்களுக்கு தனித்தனியே கழிவறை வசதி இல்லை. இருபாலரும் ஒரே கழி வறையை பயன்படுத்தும் நிலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    மணிமண்டப வளாகத் திற்குள் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இயங்கா மல் இருப்பதால் சமூக விரோத செயல்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. இத னால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், காவ லாளியை நியமிக்க வேண் டும், திறந்த வெளியில் உள்ள மின்சார பெட்டி உள்ளது.

    அதற்கு பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தர வேண்டும், வர்ணம் பூசி மணிமண்டபத்தை புதுப்பொலிவாக்கிட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாவாணரின் புகழை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    • ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது.
    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    பொன்விழா மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அனைத்து அம்சங்களுடனும், தகவல்களுடனும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது, தொட்டில் குழந்தை திட்டம் போன்றவை குறித்தும் தகவல்களும், மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதாவை சமூக நீதி தலைவராக அடையாளம் காட்டிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தீர்மானம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தபட்டிருந்தது.

    1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜெயலலிதாவின் சபதம் ஆகியவை குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து மாதிரிகளும், புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலங்களில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அரங்கை தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

    நீண்ட காலமாக கட்சியில் உள்ள தொண்டர்கள் தங்கள் பழைய நினைவுகளை அங்கிருந்த படங்களை சுட்டிக்காட்டி அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அ.தி.மு.க. வரலாற்று அரங்கமாக கண்காட்சி அரங்கம் காட்சி அளித்ததாக தொண்டர்கள் கூறினர்.

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • மதுரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    தமிழ் வளர்ச்சித் துறை யின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோ ரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப்பாடுபட்ட தலை வர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள் வருகிற 23.08.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பக லிலும் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகக் கூட்டரங்கில் நடத்தப்பட இருக்கி றது.

    அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனி யார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி கள், பொறியியல் மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க லாம்.

    போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.

    கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்காக தலைப்புகள் வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல் வன், முத்தமிழறிஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப் பொக்கும் எல்லா உயி ருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.

    கல்லூரி மாணவர்களுக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச்சூரியனே, பூம்பு கார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூகநீதிக் காவலர் கலைஞர் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கருணாநிதி யின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் நடைபெற வுள்ளன.

    பள்ளி கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத் தப்படும் பேச்சுப் போட்டி யில் மட்டும், தங்கள் பேச் சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத்தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

    மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

    • எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி மகத்தான சாதனை படைப்பார்.
    • முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி. ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை எளிய மக்களுக்காக அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 1972 ஆம் ஆண்டு தொடங்கினார் .இந்த இயக்கம் ஏழை எளிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி பெற தொடங்கப்பட்டது என்பதால் மக்கள் அனைவரும் தங்களின் ஒட்டு மொத்த ஆதரவை எம்.ஜி.ஆர்.க்கு தந்தனர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மதுரை மண்ணில் மகத்தான மாநாட்டை நடத்தி அ.தி.மு.க.வின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். இதன் மூலம் அ.தி.மு.க. இயக்கம் தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது.

    எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க. இயக்கத்தை வலிவோடும் பொலிவோடும் வளர்த்தார்.

    மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டையும் நடத்தி மதுரையை அரசியல் தலைநகராக்கினார். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக அ.தி.மு.க. உருவெடுத்தது.

    தமிழக அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் அமர்ந்த இயக்கம் அ.தி.மு.க. ஏழை எளிய மக்களுக்கு மகத்தான திட்டங் களை தந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி 3-ம் தலைமுறையாக அ.தி.மு.க. தலைமைக்கு தலைவராகி இருக்கிறார்.

    கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப் பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஒட்டு மொத்த தொண்டர்களின் மகத்தான ஆதரவை பெற்று

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் 3-வது மக்கள் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது தலைமையில் அ.தி.மு.க. இயக்கம் தொடர்ந்து மிக வலிமையாக வளர்வதோடு மகத்தான வெற்றியை பெரும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை வரும் அளவுக்கு மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைக்கும்.என்பதை தொண்டர்களின் மகத்தான எழுச்சி மதுரை மாநாட்டில் மூலம் வெளிப்படுத் தப்பட்டுள்ளது.

    எனவே அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் தமிழ கத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய நடுத்தர வர்க்கத் தினரின் முகத்திலும் தெரிகிறது.

    எனவே இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை இதன் மூலம்

    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் எடப்பாடியாரும் மகத்தான சாதனை படைக்க தயாராகிவிட்டார் என்பதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது.
    • மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம்.

    அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில் கவிஞர் முத்துலிங்கம் உள்பட கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.

    கவியரங்கை தொடங்கி வைத்து பா.வளர்மதி பேசியதாவது:-

    இந்த உணர்ச்சிமிகு எழுச்சி மாநாட்டை நடத்த ஆகஸ்டு மாதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ததிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு.

    இதே ஆகஸ்டு மாதத்தில் தான் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். இதே ஆகஸ்டு மாதத்தில் தான் வெள்ளையனை வெளியேற்றி சுதந்திரம் பெற்றோம்.

    இப்போது கொள்ளையர்களை கோட்டையை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை அ.தி.மு.க. தொடங்கி இருக்கிறது. இதே உணர்ச்சி யோடும், எழுச்சியோடும் இந்த முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம். மீண்டும் அம்மாவின் ஆட்சியை கோட்டையில் அமர்த்துவோம் என்றார்.

    • பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
    • கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

    பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களையும் 4 சக்கர வாகனங்களையும் நிறுத்தி சென்று இருந்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்படலாம். சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான கார்களிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர்.
    • மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன.

    மதுரை:

    தமிழ்நாட்டையே பிரமிக்க செய்யும் வகையில் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை முதல் தொடங்கி விமரிசையாகவும், எழுச்சியோடும் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் சாரை சாரையாக வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர்.

    சென்னையில் இருந்து நேற்று சிறப்பு ரெயிலில் 1,300 பேர் மதுரை வந்தடைந்தனர். இதேபோல், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளின் தலைமையில் பஸ், வேன்களில் மாநாட்டிற்காக குவிந்துள்ளனர். இதனால் மதுரை, எப்போதும் இல்லாத அளவுக்கு அ.தி.மு.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    முன்னதாக மதுரை வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட கட்சியினர் தங்கள் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வது போல் மாநாட்டில் பங்கேற்க மதுரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிந்ததால் மாநாட்டு திடல் தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் மதியம் இரண்டு மணிக்கு மேல் மாநாட்டு திடலில் பல லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான கார்களிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர். அதிலும் ஏராளமானோர் மனைவி, பெற்றோர், குழந்தைகளுடனும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். இதனால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான வாகனங்களை ஒழுங்குபடுத்த அ.தி.மு.க. பேரவை நிர்வாகிகள் சுமார் 3,000 பேர் பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. இதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்த மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் மாலையில் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக அவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடும் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுச்சி உரையாற்றுகிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

    • திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
    • மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    மதுரை:

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    அதனை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வராற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    நேற்று காலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரெயில்கள், பஸ், வேன், கார் மூலமாகவும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மாநாட்டு திடலை நோக்கி படையெடுத்து வந்தனர்.

    அவ்வாறு பகலிலேயே வந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுத்தனர். பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறை எடுக்காதவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கி இரவை கழித்து இன்று காலை மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். காலையிலேயே அவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு.
    • எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை அ.தி.மு.க. தொண்டர்கள் வழங்கினர்.

    மதுரை:

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார்.

    திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.

    ×